Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

 பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

பார்ப்பனரல்லாத சமுதாயத்தார் விழிப்புற்றுச் செயல்பட வேண்டும். முதலாவதாக தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும். கல்வி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள பார்ப்பனரல்லாதாரை ஊக்குவிக்க வேண்டும்.

கல்வி வசதியற்ற இடங்களில் அவ்வசதியை ஏற்படுத்தவும், புத்திகூர்மையுள்ள ஏழை சிறுவர், சிறுமியர்க்குக் கல்வி கற்பிக்க நிதி உதவி வழங்கவேண்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் சங்கங்கள் துவங்கப்பட்டு அவை திறமையாக பராமரிக்கப்பட வேண்டும். பார்பனரல்லாதாருக்கு என கல்வி கொள்கை உருவாக்க வேண்டும், சமுதாய அரசியல் அமைப்புகள் உருவாக்கபடவேண்டும், தங்களது கோரிக்கையை முன்வைப்பதற்கு ஆங்கலத்திலும் , தாய்மொழியிலும் செய்தித்தாள்கள் துவங்கி நடத்தப்பட வேண்டும். தந்திரம் மிகுந்தோர் அவர்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன் படுத்திக்கொண்டார்கள் பார்ப்பனர்களோடு ஒப்பிடும்போது தாமிருக்கும் தற்கால நிலை குறித்து பார்ப்பனரல்லாதாரிடையே அதிருப்தி நிலவுகிறது, அரசாங்கம் ஒரு வேலை அறியாமல் இருக்கலாம் , அரசின் கவனத்தை திருப்பவேண்டும். பார்ப்பனரல்லாதார் ஒருவருக்கொருவார் உதவி செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயமும், குறைந்த பட்சம் தங்களது வளர்ச்சியை முதன்மையாக கொள்ள வேண்டும்.
தாழ்ந்த நிலையிலும் அல்லாமல் - சுயமரியாதை பெற்ற வளர்ச்சியுற்ற அமைப்பாக உயர்வானதென்று கருதப்படுகிற பிற வகுப்பாரோடு ஒத்துழைக்க முடியும்.
பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை இன்றைக்கும் பொருந்தும்.
11.8.1957 -ல் 1967 என்கிற தலைப்பில் மதுரையில் சிறப்பு சொற்போழிவு நிகழ்த்திய அண்ணா கீழ்க்கண்டவாறு கூறினார்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமநீதி காணும் நோக்குடன் துவக்கப்பட்டதே தவிர, அது பார்ப்பனர்களைத் தனிப்பட்ட முறையில் வெத்ததில்லை, வெறுக்கவேண்டிய அவசியமில்லை, பார்பனர்களுக்கு உரிய பங்குகைத் தந்து, பார்ப்பனரல்லாதாருக்கு உரிய பங்கைத் தரவேண்டும் என்ற நீதியை அடிப்படையாகக் கொண்டதால்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு நீதிக்கட்சி என்று தமிழில் பெயரிடப்பட்டது என்று பேசினார் அறிஞர் அண்ணா.

நூல்     ; திராவிட இயக்க                      வாரலாறு.
பக்கம் ; 126 to 127.

No comments: