Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - அன்னை நாகம்மையார்

திராவிட வரலாற்றில் பெண் போரளிகள். அன்னை நாகம்மையார்.

பெரியாருக்கு திருமணம் ஆகும்போது பெரியாருக்குப்  பத்தொன்பது வயது, நாகம்மையாருக்கு பதிமூன்று வயது. இன்றைய கணக்கில் குழந்தை திருமணம் தான். பெரியார் வாசதியான குடும்ப பின்னனி கொண்டவர் நாகம்மையார் இவர்களை விட வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்தவர். இருவீட்டார் குடும்பத்திலும் இந்த திருமணம் செய்ய விருப்பம்மில்லை, இருந்தாலும் இருவரின் பிடிவாதத்தால் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், அந்தக் காலத்தில் நடந்த காதல் திருமணம்.

நாகம்மையார் சராசரி பெண்களைப் போல் சடங்கு, சம்பிராதயங்களோடு வளர்ந்தவர்.சம்பிரதாயங்கள் நிரம்பிய குடும்பத்தில் மாமியார், மாமனார்ரை திருப்திபடுத்தவேண்டும், ஒரு புறம்  சடங்கு, சம்பிரதாயத்தை ஒழிக்க நினைக்கும் கணவார்,  இருதரப்பையும் திருப்தி படுத்தவேண்டுய கடமை அந்த சின்ன பெண்ணிற்கு ஏற்படுகிறது. முதலில் அவர் மாமியார் தரப்பில் நிற்கிறார், பெரியார் அவரை மாற்றுவதற்காக முதலாவதாக சாப்பாட்டிலிருப்து துவங்குகிறார்.  நாகம்மையார் சைவ சாப்பாடு சாப்பிடவேண்டும், விரதம் இருக்க வேண்டும். பெரியாருக்கு கண்டிபாக அசைவ உணவு  தாயார்செய்துவிட்டு, அந்தத் தீட்டை போக்குவதற்காகக் குளித்து, அதன் பிறகு அவர் சாப்பிட வேண்டும். இதற்கு இடையில் பெரியார் தான் சாப்பிட்டு விட்டு எழும்புத்துண்டுகளை அந்த உணவுக்குள் சொருகி வைத்துவிடுவார். குளித்து விட்டு மாமியாரும் மருமகளும் சாப்பிட உட்கார்ந்தால் சாப்பாட்டிலிருந்து எழும்பு துண்டுகள் விழும், தன் மகனை கட்டுப்படுத்த முடியாத என்று முடிவு செய்த தாயார் . தன் மருமகளிடம் இனிமேல் நீ எந்த விரதமும் இருக்கவேண்டாம் என்று விரதங்களில் இருந்து விடுதலை கொடுத்தார். அன்றிலிருந்து, விரதங்களுக்க விடுதலை கொடுத்தார்.

நாகம்மையார் தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளவர் எப்படி தடுப்பது என்று சிந்தித்தா, மைனர் நண்பர்களிடம் தன் மனைவி என்று சொல்லாமல் நம் ஊருக்கு தாசி வந்திருப்பதாகவும் கோவிலுக்கு சென்றால் பார்க்கலாம் என்றார், அவ்வாறே அவரது நண்பர்களும் நாகம்மையார் செல்லும்போது கேலியும், கிண்டலும் செய்ய பயந்து போன நாகம்மையார் வீட்டிற்கு வந்து அழுதிருக்கிறார். பிறகு அய்யா கோவில் என்றால் அப்படிதானம்மா இருக்கும் என்று சொல்லி கோயில் பற்றிப் புறிந்து கொண்ட அம்மையார் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டார். படுக்கைக்கு செல்லும்போது புருசன் இருக்கும் போது தாலி எதற்கு என்று சொல்லி தாலியை கழட்ட செய்தார்,. பக்கத்து வீட்டு பெண்கள் தாலி இல்லாததை பார்த்து கேலியும், கிண்டலும் பேச, என் கணவர் அருகில் இருக்குபோது தாலி எதற்கு என்று  எதிர் கேள்வி கேட்டு ஊரார்கள் பேசுவார்கள் என்ற அச்சத்திலிருந்து விடுபட்டார்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 72 to 74.

No comments: