அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்டுவெல் வேறு எந்த ஐரோப்பியரையும் விட திராவிட மறுமலர்ச்சிக்கு ஆதரவாக ஆய்வின் மூலம் உருவாக்கி தந்தார். 1838 -ல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் நடத்தி, தமிழ் மொழியில் மூல்கி, நமது மொழியிலும், வரலாற்றிலும் நிபுணர் என்கிற பெயரைப் பத்தாண்டுகளில் பெற்றார்.
1856 -ல் வெளியிட்ட"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அவரது ஒப்பற்ற ஆய்வு நூல் மொழியியலக்குத் தரப்பட்ட உயர்வு.
அது வெறும் மொழி இயல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல! தமிழ் - திராவிட இன வரலாறும் அதில் கூறப்பட்டிருந்தது!
திராவிட மொழிகளின் தொன்மை ஆரியர் வருகை பல நூற்றாண்டுகளுக்கு முன் இருக்கலாம். உதாரணமாக கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்று கிரேக்க அசிரிய வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒழிகள் கடந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்று ஒலிக்கப்படுவதைப் போன்றே ஒலிக்கப்பட்டன.
திராவிட மொழிகள் வட மொழியிலிருந்து பிறந்தன என்று சொன்ன வட மொழி பண்டிதற்கள், அதை அப்படியே ஏற்றுக்கொண்ட ஏ.எச்.வில்சன் போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் கொள்கையும் குருட்டு கொள்கையே என்றார்.
தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர்களிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்று வடமொழிப் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பி வந்தார்கள், அதணாலே வட இந்திய மொழி மரபுகளிலிருந்து எத்தணையோ மாறுபட்டிருப்பினும், வடமொழியினத்திலிருந்து பெறப்பட்டவையே என்று சாதித்து வந்தனர்.
இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் நம்பினர். அவார்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் வடமொழிச் சொற்கள் தற்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால் அம்மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபு மொழிகளும் பல இருந்தன.இவ்வாறு ஆய்வினை மேற்கொண்ட கால்டுவெல் தமிழ் வடமொழியின் தயவின்றியேதயவின்றியே தனித்தியங்கும் தன்மை பெற்றது என்பதையும் எடுத்துக்காட்டினார்.
நூல் ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 172 to 174.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - இராபர்ட் கால்டுவெல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment