அன்னை நாகம்மையார் என்று சொல்லும்போதே, சேர்த்து உச்சரிக்கப்பட வேண்டிய இன்னொரு பெயர் கண்ணம்மாள் ஆகும். அன்னை கண்ணம்மாள் அய்யா பெரியார் அவர்களின் உடன் .பிறந்த தங்கை ஆவார். அவருடைய கணவரின் பெயர் காரணமாக அவர் எஸ்.ஆர். கண்ணம்மாள் என்று அழைக்கப்படுகிறார். நாகம்மையார் அவர்களும் சேர்ந்துதான் இயக்க வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். கள்ளுக்கடைஎதிர்ப்பு போராட்டமாகட்டும், கதருக்கான போராட்டமாக இருக்கட்டும், இவை அனைத்திலும் எப்படி அன்னை நாகம்மையார் முழுமையாக ஈடுபட்டு அவற்றை எதிர்கொண்டாரோ அதே வேகத்தில் அண்ணை கண்ணம்மாள் அவார்களும் முழுமையாக ஈடுபட்டு எதிர் கொண்டார் என்பதை முக்கியம்மாக சொல்லவேண்டும். இதில் கண்ணமாள் அவர்களிடம் பார்க்கும் ஒரு படிநிலை வளர்ச்சி அன்னை நாகம்மையார் அவராக மேடையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் பெரியார் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, குடியரசிலே அன்னை நாகம்மையார் பெயரிலே அறிக்கை வெளிவந்திருக்கிறது. வாசகர்கள் தோழர்கள் தோழர்கள் ஒத்துழைப்பு தருமாறு என வந்திருக்கிறது . மற்றபடி கட்டுறையோ, மேடைபேச்சாகவோ அவருடைய பங்களிப்பு இல்லை.
ஆனால் கண்ணம்மாள் அவர்களைப் பொருத்தவரை சொற்பொழிவாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்தபோது " இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும் ?" என்கிற தலைப்பிலே கட்டுரை வெளிவருகிறது. இன்றைக்குப் பலர், பெரியாரும், அம்பேத்கரும் ஆங்கிலேய அரசின் அடிவருடிகலாக இருந்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த அரசாங்கமும் ,ஆட்சியும் ஒழிய வேண்டும் என்று கட்டுரை எழுதியதற்காக அந்தப் பத்திரிக்கை நடத்துவதே கேள்விக்குள்ளாகி, பெரியார் அவர்களையும், கண்ணம்மாள் அவர்களையும் அரசாங்கம் கைது செய்து கடுங்காவர் தண்டனை விதித்தது. இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு பெண் பத்திரிகையாளர் கைதாவது இதுவே முதல் முறை.
நூல் ; கருஞ்சட்டைப் பெண்கள்,
பக்ககம் ; 84 to 85.
எழுத்தாளர் ; ஓவியா.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - அன்னை கண்ணம்மாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment