Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - மக்களிடையே உள்ள பொருளாதாரப்பிரிவுகள்

உலகெங்கும் உள்ள மக்களிடையே இம்மாதிரி பொருளாதாரப்பிரிவுகள் தான் உள்ளன. இதை (class) என்று அழைக்கிறார்கள். அவை சாதியை குறிப்பிடும் சொல் அல்ல.

மனுதர்மம் கூறும் ஜாதி தமிழ்ச்சொல் அல்ல அதற்கு நேரடி தமிழ்ச் சொல்லோ அல்லது அதற்கன பொருளைக் கூறும் சொல்லோ தமிழில் கிடையாது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனின் ஆட்சி வழுவாகக் காலூன்றி விட்டது. ஆங்கிலேயர்களிடம் ஆட்சி, அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்களது உத்தரவுகளை நேரடியாக இந்தியர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

அவர்களின் ஆங்கிலம் இந்தியர்களுக்குப் புரியவில்லை இந்தியர்களின் மொழிகள் அவர்களுக்கு புரியவில்லை. இதைப் புரிந்து கொண்ட பார்பனர்கள் இதுவரை மன்னர்களையும், மக்களையும் மயக்கிய தேவபாஷையாகிய சமஸ்கிருதத்தைக் கீழே போட்டுவிட்டு - மிலேச்ச மொழியாகிய ஆங்கிலம் படித்தார்கள். ஆங்கிலம் தான் எதிர்காலம் என்பதைப் புரிந்து கொண்டது அவர்களின் புத்திசாலித்தனம்.

ஆங்கிலம் அவர்களை பிரிட்டனின் உத்தரவுகளை இந்தியர்களுக்கு புரியவைக்கும் துபாஷிகளாக்கியது.(மொழிபெயர்பாளர்). தளவாய்கள், பிரதானிகள் ராயசங்கள், என்று அரசின் உயர்பதவிகள் அத்தனையும் அவர்களைத் தேடி வந்தன. விதைக்காமளேயே வீளையும் கழனியாகிய பார்ப்பனீயம் விதையும் கிடைத்தால் வீணாக்குமா? நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியலில், சொந்த நாட்டினரான திராவிடர்கள் கொடிபிடித்தார்கள் வந்தேறிகளான அவர்கள் முடிவெடுத்தார்கள்.

வழக்காடும் நீதிமன்றங்கள், நோய் தீர்க்கும் மருத்துவமனைகள், பசிபோக்கும் உணவு விடுதிகள், கல்விச் சாலைகள், செய்தித்தாள்கள், நாடக மேடைகள், இசை, நடனம், ஓவியம் அத்தனையிலும் அவர்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

சூத்திரனாக அடிமையாக இரு, படிப்பில் தற்குறியாக இரு. வேலைவாய்ப்புகளில் உடால் உழைப்பு வேலைகளை மட்டும் பார் - என்று 3000 ஆண்டுகளாக குனியக் குனிய குட்டும் பார்ப்பனீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த, அயோத்திதாசப் பண்டிதர், இராமலிங்க அடிகள் ஆகியோருக்குப்பின், இனியும் கை கட்டி வாய் பொத்தி அடிபணிய வேண்டாம் என்று ஆங்காங்கே உரிமைக்குரல்கள் எழுந்துகொண்டிருந்த நேரம்.

நூல்     ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 8 to 9.

No comments: