Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - திராவிட கலாச்சார மேம்பாட்டை எடுத்து வைக்க ஐரோப்பியர்கள் உதவினர்


இந்தியாவின் வரலாற்றையும், கலாச்சாரப் பெருமையையும் கண்டறிய எப்படி ஐரோப்பியர் உதவினரோ, அதுபோலவே திராவிட கலாச்சார மேம்பாட்டை எடுத்து வைக்கவும் ஐரோப்பியர்கள் பெரிதும் உதவினர்.

குறிப்பாக கிறித்துவ பாதிரியார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தபோது, அவரவர்கள் தாய்மொழியில் மதத்தை போதிக்க வேண்டும் - என்கிற குறிக்கோள் காரணமாகத் தமிழ் மொழியிலும். கலாச்சாரத்திலும் காட்டிய ஆர்வம் கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

தமிழில் அதிகம் ஈடுபாடு காட்டிய முதல் பாதிரியார் இராபர்ட்  - டி- நோபிலி. இவர் மதப்பிரச்சாரத்திற்க்காக தமிழில் உரைநடை எழுதினார்,.

வீரமாமுனிவர் என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்ட, மதப்பணியோடு, தமிழ்ப் பணியும் ஆற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி ஆவார். 1711 ஆண்டூ மே - ல் மதுரை வந்தார், இங்கு பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழிலக்கணம் இலக்கியம் கற்றார்.

தான் இயற்றிய நூல்களில் வடமொழியை இவர் அதிகம் கலக்கவில்லை, அக்காலத்தில் எ-ஏ, கெ-கே, கொ-கோ, என்று எழுதம் வாழக்கமில்லை, எ, ஓ - என்னும் உயிர் எழுத்துக்களையும், இவ்வுயிர் எழுத்துக்கள் ஏறிய மெய்யெழுத்துக்களையும் எழுதி அவற்றின் மேல் புள்ளி வைத்தால் குறிலாகவும், புள்ளி வைக்காவிட்டால் நெடிலாகவும் கொள்வது வழக்கமாக இருந்தது, இவர் தான் அதை மாற்றி எ-ஏ, கெ-கே, கொ -கோ, என்று எழுதும் மரபைப் புகுத்தி , தண்டமிழ் மொழிக்கு இதுவரை யாரும் செய்யாத பெருந்தொண்டு செய்தார்,  தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முதல் நூலாக விளங்கும் சதுரகராதி" இயற்றித் தமிழகராதியின் தந்தை என்ற அழியா புகழ் பெற்றார்.

திருக்குறளின், அறத்துப்பாளையும், பொருட்பாளையும், லத்தீனில் மொழிபெயர்த்து மேலைநாட்டுக்கு வழங்கினார்.
ஐந்திலக்கணங்களையும் கூறும் "தொன்னூல்", தமிழ்ப் பேச்சு மொழியைப் பற்றிய கொடுந்தமிழ் இலக்கணம் ஆகியவை இவர் இயற்றிய இலக்கண நூல்கள். இவர் உருவாக்கிய அடிப்படைதான் பிற்காலத்தில் சான்றோர்கள் தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் ஆய்வு நடத்திடப் பேருதவியாக இருந்தது.

நூல்      ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம்   ; 171 to 172.

No comments: