Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - "மிதவாதி" என்பவர் எப்படி இருப்பார் ?

 "மிதவாதி" என்பவர் எப்படி இருப்பார் ? அவரது தன்மைகள் என்ன?
பண்டித நேரு தனது தந்தையையே ஒரு உதாரணமாகக் காட்டுகிறார்,
1907 - லும், 1908 -லும், அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகும் பண்டித மோதிலால் நேரு " மிதவாதிகளுக்குள் ஒரு மிதவாதியாக இருந்தார்.

திலகரிடம் அவருக்கு அபிமானம் இருந்தபோதும் அவர் தீவிரவாதிகளைக் கட்டோடு வெறுத்தார்.
"இதற்கு என்ன காரணம்? சட்டத்திலும், அரசியல் சட்டமுறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தமையால் அவர் அரசியலை ஒரு வழக்கறிஞர் என்கிற முறையிலும் , அரசியல் சட்டக் கோணத்திலுமே  அணுகினார், கடுமையான, தீவிரமான வார்த்தைகளைப் போலவே அதற்கேற்ற செயல்முறையையும் பின்தொடராவிட்டால் அதனால் யாதொரு பலனும் விளையாது என்று அவரது தெளிந்த சிந்தனைக்குட் பட்டது. சுதேசி, (அன்னியத் துணி) பகிஷ்கார இயக்கங்களால் பெரும் நன்மைகள் விளைவதாக அவருக்குத் தென்படவில்லை. மேலும் இந்த இயக்கங்களுக்கு மதச்சார்புடைய தேசியம் பின்னணியாக இருந்தது அவரது சுபாவத்திற்கு முரணாதாகும். அவரது சுபாவத்திற்கு முரணானதாகும், அவர் தனது பாதையை கடந்த காலத்திற்குத் திருப்பி, புராதன இந்தியாவை உருவாக்க விரும்பவில்லை, அவை குறித்து அவருக்கு எந்தவித அனுதாபமோ, ஈடுபாடோ கிடையாது.

சாதி முறை போன்ற சம்பிரதாயங்களைப் பிற்போக்கானதென்று அவர் முற்றிலும் வெறுத்தார். அவர் மேற்கத்திய நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டார். மேலைநாட்டு முன்னேற்றம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அத்தகைய முன்னேற்றம் இங்கு இங்கிலாந்தின் தொடர்புடன் தான் உருவாக முடியுமென்று அவர் நம்பினார்.

தென்னாப்பிரிக்காவில் வெற்றி கண்ட சத்தியாக்கிரக முறையை காந்தியார் இந்தியாவில் துவக்க முனைந்தபோது மோதிலால் அதை எப்படி விரும்பவில்லை என்பதையும், பலர் சிறைக்குச் செல்வதன் மூலம் என்ன நன்மை விளைந்துவிட முடியும்? அதனால் அரசு எப்படி வளைந்து கொடுக்கும்? - என்றெல்லாம் கருதியதாகவும் பண்டித நேரு தனது சுயசரிதத்தில் விவரித்துள்ளார்,

நூல்     ; திராவிட இயக்க வரலாறு,
பக்கம் ; 146 to 148.

No comments: