Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - பண்டித நேரு அவர்கள் அன்றைய நிலையை கீழ்க்கண்ட வாறு விளக்குகிறார்

 1912 -ம் ஆண்டின் இறுதியில் அரசியல் ரீதியாக இந்தியா மிகவும் மந்தமாக இருந்தது. திலகர் சிறையில் இருந்தார். தீவிரவாதிகள் சரியான தலைமை இல்லாமல் செயல்படாமல் இருந்தனர். பிரிவினை நீக்கப்பட்டுவிட்டதால் வங்கம் அமைதியாக இருந்தது. மிண்டோ - மார்லி திட்டப்படி உண்டான சட்டசபைகளை மிதவாதிகள் ஒன்று பட்டு ஆதரித்தனர். ஆண்டுதோறும் கூடி, மந்தமான தீர்மானங்களை நிறைவேற்றி, யாருடைய கவனத்தையும் கவராத மிதவாதிகள் கூட்டமாகக் காங்கிரஸ் இருந்தது.

பண்டித நேரு அவர்கள் அன்றைய நிலையை கீழ்க்கண்ட வாறு விளக்குகிறார்.

என்னுடைய அரசியல் நான் சார்ந்திருந்த பூர்ஷுவா வார்க்கத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது. உண்மையில் வெளிப்படையான அரசியல் அப்போது பார்ப்பனியத்தை பற்றியதாகவே இருந்தது, மிதவாதிகளும், தீவிரவாதிகளும் அவர்களுக்கே பிரதிநிதித்துவம் வகித்தார்கள். வெவ்வேறு தோரணையில் அவர்களது நலத்துக்கே உழைத்தனர். அவர்கள் அனைவரும் பிரிடிஷ் ஆட்சியால் செலுமை பெற்றவர்கள். தங்கள் அனுபவைத்து வரும் நலத்திற்கும் ஆபத்து ஏற்படகூடிய எந்தவித திடீர் மாற்றங்களையும் அவர்கள் விரும்பவில்லை.

அவர்கள் ஆங்கில அரசுடனும் நிலபிரபுத்துவ வர்கத்தோடும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். தீவிரவாதிகளும் அடித்தட்டுகளில் இருக்கும் மத்திய தர வர்க்கத்திற்க்குப் பிரதிநிதித்துவம் வகித்தார்கள். ஆலைத் தொழிலாளர்கள்  யுத்தத்தினால் அவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சில இடங்களில் உள்ளூர்களில் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குச் செல்வாக்கே இல்லை. விவசாயிகள் குருடர்களாகவும், வறுமையால் தாக்கப்பட்டு அல்லலுறும் வெறும் மக்கள் திரளாகவும், விதியை நொந்து வாழ்பவர்களாகவும், அவர்களோடு தொடார்பு கொண்ட அரசாங்கம், நிலப்பிரபுக்கள், கடன் கொடுப்போர், சாதாரண அதிகாரிகள், போலீஸ், வழக்கறிஞர்கள், பூசாரிகள் ஆகியோரல் சுரண்டப்படுகிறவர்களாகவும் வாழ்ந்தார்கள்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 140 to 142.

No comments: