1890 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இன்றைய ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கடப்பா, கர்நூல், பெல்லாரி, அனந்தபூர், சித்தூர், கர்நாடாகத்தின் உடுப்பி, தென் கன்னடம், ஒடிசாவின் கஞ்சம், கேரளத்தின் மலபார் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சென்னை - ராஜதானியின் மக்கள் தொகை நான்கரை கோடி, அதில் திராவிடார்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் மேல், பார்ப்பனர்களின் என்னிக்கை 15 லட்சத்திற்கும் கீழ்,
இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பார்ப்பனர்கள். ஒருவர் மட்டுமே திராவிடர்.
உதவிப் பொறியாளர்கள் 21 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள் 4 பேர் திராவிடர்கள்.
உதவி மாவட்ட ஆட்சியர்கள் 140 பேர்களில் 77 பேர் பார்ப்பனர்கள் 63 பேர் திராவிடர்கள்.
உயர் வேலைவாய்ப்புகள் அத்தனையும் பார்ப்பனமயம்.
பல தலைமுறைகளாகப் படித்து முன்னேறிய பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைத்தனர். திராவிடர் சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டுமே படிப்பு வாசனை இல்லாத தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைத்தார்கள்.
குடும்பமே பாடம் சொல்லிக், கொடுத்த மாணவனோடு, ஆசிரியரிடம் மட்டுமே பாடம் படிக்கும் திராவிட மாணவன் போட்டியிடுவது அவ்வளவு சுலபமாக இல்லை.
அரசின் வேலைவாய்ப்புகள் அத்தனையும் பார்ப்பன மயமானது. உடல் உழைப்பு பணிகள் சீருடைப் பணிகள், நான்காம் நிலைப் பணிகள் பக்கம் அவர்கள் எட்டிக்கூட பார்ப்பதில்லை இந்நிலையில் புறக்கணிக்கப்படும் மாணவர்களை தாழ்த்தப்படும் சமூகத்தை - ஒடுக்கப்படும் இனத்தை ஒன்று திரட்டி உரிமைக் குரல் எழுப்ப முடிவு செய்தார்கள். எம் புருசோத்தமன் நாயுடும், மற்றொருவர் சுப்ரமணியம் இரண்டு பேரும் வழக்கறிஞர்கள்.
1909 ஆம் ஆண்டு உரிமைக் குரல் கொடுக்க அவர்கள் உருவாக்கிய அமைப்பிற்குப் பெயர் - பார்ப்பனர் அல்லாதார் சங்கம் ( The Madras - Non Brahmin Association) சங்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் ஆனால் போதிய பொருளாதாரம் இல்லை.
நூல் ;திருவல்லிக்
கேணி முதல் திருவாரூர் வாரை.
பக்கம் ; 9 to 10
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - 1890 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment