Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - சென்னை நகராட்சி

1871 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை நான்கு லட்சத்திற்கும் குறைவு . அதற்கு 180 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டது சென்னை நகராட்சி.


29.9.1688 -ல் சென்னை எர்ரபாலு செட்டித் தெருவில் ஒரு வீட்டில் துவக்கப்பட்ட சென்னை நகராட்சி துறைமுகப்பகுதியை மட்டும் எல்லையாகக் கொண்டிருந்தது. அப்போது கவர்னராக இருந்த லிட்டன் பிரபு நகராட்சி மன்றத்தை வெள்ளையர்களின் கொள்ளைக் கூடாரமாக்கிக் கொண்டிருந்தார்.

1880 -ல் ஜார்ஜ் பிரடரிக் சாமுவேல் ஜான்சன் என்ற இயற்பெயர் கொண்ட ரிப்பன் பிரபு கவர்னராக வந்தார். உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் அடிப்படைத் தேவைக்காக உருவாக்கப்பட்ட மக்களின் மன்றங்கள் என்ற தெளிவான நோக்கத்துடன் - ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த நகராட்சி நிர்வாகத்தில், இந்தியர்களைப் பங்கு பெற வைத்தார்.

இன்று கம்பீரமாக எழுந்து நிர்க்கும் சென்னை மாநகராட்சி மாளிகை அவரது 10 ஆண்டுகால உழைப்பால் கட்டப்பட்டது. அவரது மக்களாட்சி கோட்பாடுகளால் கவரப்பட்ட மக்கள் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்று போற்றினர். அவர் எழுப்பிய மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்றுப் பெயர்வைத்து கட்டிட வளாகத்திற்குள் அவரது சிலையையும் வைத்தார்கள்.

தென்னகத்தின் தனித்த அடையாளமாக வேண்ணிரமாக ஒளிரும் அந்த மாளிகைக்கு, வெள்ளை மாளிகை என்று ஒரு பெயரும் உண்டு.

1919 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப்படி, 1919 முதல் 1923 வரை சென்னையின் முதல் நகராடீசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தியாகராயர். அதைத் தொடர்ந்து திருமலைப்பிள்ளை முகமது உஸ்மான், தனிகாசலம் செட்டியார், சர்.ஏ,ராமசாமி முதலியார்:- ஆகிய நீதிக்கட்சியின் தலைவர்கள் நகராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். சென்னை தியாகராயர் நகரில் இந்த தலைவர்களின் பெயரால் தெருக்கள் அமைந்துள்ளன.

படம்   ; சர். ஏ. ராமசாமி முதலியார்.
நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 19 to 20.

No comments: