Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - காங்கிசை நீதிக்கட்சியோடு ஒப்பிட தெரிந்து கொள்ள வேண்டியவை

 1886 ஆம் ஆண்டுகளில் கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மகாசபை நடந்தபோது அச்சபை அங்கத்தினர்களை அரசாங்க மாளிகையில் நடந்த வனபோஜனத்துக்கு (இயற்கை சார்ந்த உணவுகள்  பரிமாறப்பட்டது.) லார்டு டப்ரின் அழைத்தார். 1887 ல் காங்கிரஸ் சென்னையில்  கூடியபோதும் சென்னை கவர்னர் இவ்வாறே அவர்களுக்கு மரியாதை செய்தார். (பக்கம் 169)

இத்தகைய மரியாதைகள் 1914 ம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டன, இதே ஆண்டில் சென்னையில் கூடிய காங்கிரஸ்சுக்கு அம்மாகாணத்தின் கவர்னர் விஜயம் செய்திருந்தார்"
காங்கிரசின் பிரிட்டிஷ் கமிட்டிக்கு லண்டனில்  ஒரு காரியாலயமும், பத்திரிக்கையும் இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தன. மிஸ்டர் ஹியூமும், ஸர் வில்லியம் வெட்டர்பர்னும் தாராளமாக பணம் கொடுத்து உதவவில்லை என்றால்  லண்டன் காங்கிரஸ் காரியாலயம் எப்போதோ மூடப்பட்டிருக்கும். (பக்கம் . 177)

எனவே நீதிக்கட்சியைப் பற்றி யாரேனும் குறை சொன்னால் அவர்களுக்கு இந்தச் சூழ்நிலையை மேற்கோள் காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

காங்கிசை நீதிக்கட்சியோடு ஒப்பிடுவதற்கு  இந்தச் சமுதாய - பொருளாதாரச் சூழ்நிலையை தெரிந்து கொள்வது முக்கியம். "1900 ஆம் ஆண்டில் இந்திய தேசியம் என்பது அமைப்பு ரீதியில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கமாக இல்லை. தேசியக் காங்கிரஸ் ஒரு பிரச்சாரச் சங்கமாக இருந்ததே தவிர, அமைப்பு ரீதியான அரசியல் கட்சியாக இல்லை.  அதன் தலைவர்களான கோகலே, திலகர், சுரேந்தரநாத் பானர்ஜி, சத்யேந்திரநாத் சின்கா, பெரோஸ்ஷா மேத்தா போன்றோர் ஏற்கனவே பெயர் பெற்ற தளபதிகள். ஆனால் அவர்கள் உண்மையான இராணுவமில்லாத தளபதிகளாக இருந்தனர்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 134 to 135.

No comments: