Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - நீதிக்கட்சியில் ஜமீன்தாரர்களும், மிட்டா மிராசுகளும் அதிகம் இடம்பெற்றிருந்த காரணங்கள்

 நீதிக்கட்சியில் ஜமீன்தாரர்களும், மிட்டா மிராசுகளும் அதிகம் இடம்பெற்றிருந்தார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள், முதலாவதாக அன்று அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர்களே , பண்டித நேரு குறிப்பிட்டதுபோல அத்தகைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்!

இரண்டாவதாக இன்று போல் அன்று வயது வந்த ஆண், பெண் - இருபாலருக்கும் வாக்குரிமை கிடையாது குறிப்பிட்ட அளவிற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தார்கள்.
துவக்க காலத்தில் காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வந்த கோரிக்கைகளில் ஒன்று நிலப் பிரபுக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தரமாக நிலத்தை "செட்டில்மென்ட்" செய்ய வேண்டும் என்பதுதான் . உழுபவர்களைப்பற்றி எந்தக் கோரிக்கையும் அப்போது எழுப்பப்படவில்லை.

இந்தத் தகவலைப் பண்டித நேருவே குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரசைப் பாமர மக்களிடத்திலே கொண்டுவருவதற்கு ஒரு காந்தியார் தேவைப்பட்டார். அதுபோலவே திராவிட இயக்கத்தைப் பாமர மக்களிடத்திலே கொண்டுவருவதற்கு இங்கு கிடைத்த காந்தியார் தான் தந்தை பெரியார். அதுவரையில் அதன் தன்மை உயர் வர்க்கத்தையும், படித்த மத்திய தர வர்க்கத்தையுமே பிரதிபலித்தது.

இதை அறிஞர் அண்ணா அவர்களே 11-8-1957 -ல் மதுரையில் நடத்திய சொற்பொழிவில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

"எப்படி சித்தார்த்தர்அரண்மனையிலே பிறந்தாலும் அவர் புத்தமார்க்கத்தை ஏற்படுத்துவதற்க்கு முன்னால் அரச மரத்தடிக்கு வந்தாரோ, அதைப் போல அரண்மனையிலே இருந்த ஜஸ்டிஸ் கட்சியை பெரியார் ராமசாமி மிகப் பாடுபட்டு - எங்களையெல்லாம் துணைக்கு வைத்துக்கொண்டு - ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தார்.
"ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்தபிறகு ஜஸ்டிஸ் இயக்கம் இன்றைய தினம் நீண்ட நாளைக்கு  ஆலமரத்தடடியிலே இருந்து கொண்டால் போதுமென்று எண்ணிவிட்டார்."

அரண்மனை!
ஆலமரம்!
வெட்டவெளி!
இவை திராவிட இயக்கம் கடந்துவந்த மூன்று இயக்கத்து மூலவர்களையும் குறிக்கின்றன.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 148 to 150.

No comments: