Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் போராடியவை

நாகம்மையார் நான் சாதி சொல்ல மாட்டேன் என்று மட்டும் சொல்லியிருந்தால் அது தட்டையான பதில், என்ன நோக்கத்திற்காக கேட்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, அந்த நோக்கம் நிறைவேற ஒத்துழைக்க மாட்டேன் என்று விளக்கமாகப் பதில் சொல்கிற தன்மை இருக்கிறதே, அங்கு தான் பெரியார் கொடுத்த பயிற்சியின் வெற்றியை நாம் பார்க்கிறோம்,. நாகம்மையார் போராடிய போது , கோவில் இருந்த தெருவில் நுழைவதற்காகத் தொடாங்கிய போராட்டம்,கோயில் நுழைவு போராட்டமாகவே மாறிவிடக்கூடிய சூழலை எட்டியது. அப்போது காங்கிரஸ் இயக்கதில் இருந்தார்கள் காந்தியினுடைய இராட்டையை எடுத்துக்கொண்டு, அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டு, நடத்திய போராட்டத்தின் வல்லமை பெண்களுக்கு முன் உதாரணம் .

இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய போராட்டம் காங்கிரஸ்காரர்கள் மறக்கப்பட்டாலும். கூட கேரளத்தில் உரிய மரியாதையுடன்  இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. பெரியாரையும், நாகம்மையும் அழைத்து சிறப்பு செய்திருக்கிறார்கள் . அன்மை காலத்தில் அய்யா அவர்களின் சிலை திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார்.

1920 லிருந்து 1925 வரை காங்கிரஸ்சில் உழைத்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலிருந்து பரிந்துறைக்கப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார். காங்கிரஸ் இயக்க வரலாற்றில் அவருக்கு நிகரான பெண் போராளிகளைக் காண்பது அரிது. பட்டாடைகளையும் மாளிகை வாசத்தையும் புறந்தள்ளி, வீரியமிக்க, போராட்டங்கள் மிக்க, துண்பங்கள் நிறைந்த, அவமானங்களையும், ஏச்சுகளையும், பேச்சுகளையும் உள்ளடக்கிய பொதுவாழ்க்கையில் நுழைந்தது எத்தகைய பக்குவம்.

பிறகு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. அதிலும் நாகம்மையாரின் பங்கு அலப்பரிமது, ஏனென்று கேட்டால் பெரியார் ஒரு குடும்பமாகத்தான் இயக்கத்தை கட்டுகிறார், அந்தக் குடும்பத்தின் அன்னையாக நாகம்மை திகழ்கிறார். அத்தகைய அன்னை கிடைக்காமல் போயிருந்தால் அப்படிப்பட்ட இயக்கத்தை கட்டியிருக்க முடியுமா? பெண்களை ஈர்த்திருக்க முடியுமா? அவ்வளவு தோழர்களை உருவாக்கி இருக்க முடியுமா? திராவிடர் இயக்கம் குடும்பம் குடும்பமாக வளர்ந்த இயக்கம். அத்தனை குடும்பங்களையும் ஆதரித்து அரவணைக்கும் அன்னையாக திகழ்ந்தார்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் , 77 to 79.

No comments: