Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - அயர்லாந் அம்மையார் மூட்டிவிட்ட தீ

"நீதிக்கட்சி தோன்றுவதற்குத் தூண்டுகோலாக இருந்தது அன்னி பெசன்ட் துவக்கிய "ஹோம் ரூல்" இயக்கம்தான்"

அன்னி பெசன்ட் அம்மையார் விடுதலையாகி சென்னையில் வந்து  இறங்கிய போது அவருக்கு மகத்தான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது இரு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில் அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் . கோயில் குடை ஒன்றை "ஹோம் ரூல்" பேட்ஜ் அணிந்த இரு மாணவர்கள் பெசன்ட்டிற்கு உயரே பிடித்து வந்தார்கள்  ஊர்வலத்திற்கு முன்பு பல பஜனைக் குழுவினர் வேத பாராயணம் செய்தவாறு சென்றனர். பின்னால் பல வண்டிகள் தொடர்ந்தன.. சுப்ரமணி அய்யர் ஊர்வலத்தில் கலந்துகொண்டார். எதிரில் அய்யங்கார் பிராமணர்களின் ஒரு பெரிய கூட்டம் வேத பாடல்களைப் பாடி எதிரில் அழைத்தது. இந்நிகழ்வு அம்மையாரிடத்திலும், அவர் துவங்கிய இயக்கத்தின் திட்டங்களிலும் பிராமணர் காட்டிய அபரிமிதமான ஈடுபாட்டிற்குச் சான்றாக இருக்கும்.

24-21916- நாள் நியூ இந்தியா ஏட்டில் வாசகர் எழுதிய கடிதத்திலிருந்து,  மதுரையில் " ராவ் பகதூர்" பட்டம் பெற்றமைக்காக ஒரு பிரமுகருக்கு பாராட்டுத் தெரிவிக்கவும், விருந்தும் நடந்தது. அந்த விழாவிற்க்கு பிராமணரல்லாதாரும் அழைக்கப்பட்டிருந்தனர்.பிராமணர் உணவருந்தும் இடத்திலிருந்து 100 கஜம் தள்ளி பார்ப்பனரல்லாதாருக்கு உணவு பந்தி போடாப்பட்டிருந்தது. மக்கள் தொகையில் அதிகமானவர்களான பிராமணரல்லாதார் மீது பிராமணர்கள் அனுதாபத்தையும் தோழமையும் காட்டாமல் இவ்வாறு வெறுப்பைக் காட்டினால், ஹோம் ரூல் என்றும், சுயாட்சி என்றும் கோரிக்கை எழுப்பும் பிராமணர்கள், பிராமணரல்லாத சகோதரர்களுக்கு ஆதரவாக எப்படி சட்டம் இயற்றுவார்கள் என்று வாசகர் நியூ இந்தியா ஏட்டில் எழுதினார்.

ஏற்கெனவே அரசியலில் ஆதிக்கம் பெற்றிருந்த பார்ப்பனர்கள், அன்னிபெசன்ட் இயக்கத்தில் ஓரணியில் சேர்ந்ததால், பிராமணரல்லாதார் இனியும் எதிரணி அமைக்காவிடில் அரசியல் சீர்திருத்தங்களில் உரிய பங்கு கிடைக்காது  என்று தூண்டியது.
அன்னிபெசன்ட் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்த உணர்வுகளின் எதிரொலி தான் ஒன்று திரண்ட சக்திகளுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல் தான் - தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 157 to 167.

No comments: