Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - காந்தியாரின் ராமராஜ்யப் பேச்சு

காந்தியாரின் ராமராஜ்யப் பேச்சு முஸ்லீம்களிடையே எதிர்ப்பையும், முற்போக்குவாதிகளிடையே அருவருப்பையும் சம்பாதித்தது.

"ராமராஜ்யம் என்கின்ற பொற்காலம் திரும்பி வரவேண்டும்" என்பன போன்ற சில சொற்றொடர்கள் எனக்கு அலுப்பை ஏற்படுத்தின. ஆனால் அதில் குறுக்கிடுவதற்க்கு நான் சக்தியற்றவனாக இருந்தேன் ,.. அடிக்கடி நாங்கள் எக்களுக்குள்ளாகவே அவரது விசித்ர, விநோதங்களைப் பற்றி விவாதித்துவிட்டு, பாதி நகைச்சுவையோடு, சுயராஜ்யம் வந்த பிறகு இந்த விசித்திரங்களை ஊக்குவிக்கக் கூடாது என்று பேசுவோம், இவ்வாறு பண்டித நேரு தனது "சுயசரிதையில்" குறிப்பிடுகிறார்.

"மிதவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் சொல்லப்பட்டவர்கள் ஏறத்தாழ யூர்ஷுவா வர்கத்தைச் சேர்ந்தவர்களே மிதவாதிகள் அல்லது தீவிரவாதிகளுக்கிடையே குறிக்கோளிலோ, இலட்சியத்திலோ பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இரு சாராரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குட்பட்ட சுயாட்சி பற்றியே பேசினார்கள் . தற்போதைக்கு அதில் கொஞ்சம் கிடைத்தாலே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஆனால் தீவிரவாதிகள் மிதவாதிகளைவிடச் சற்று அதிகம் எதிர்பார்த்தார்கள் கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார்கள், எண்ணிக்கையில் சிறிதளவே இருந்த புரட்சிவாதிகள் முழு அளவு விடுதலையை விரும்பினார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்களிடையே அவர்களுக்குச் செல்வாக்கு கிடையாது.

மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், மிதவாதிகள் வசதி படைத்தவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் கொண்ட கட்சியினர். தீவிரவாதிகளிடையே வசதியற்றவர்களும் பலர் இருந்தனர். அது தீவிரம் பேசிய கட்சியாக இருந்தமையால் இளைஞர்களை கவர்ந்தது. கடுமையான பேச்சு ஒன்றே செயலுக்கு சமம் என்று ,கருதினார்கள் ,... ஆனால் மிதவாதிகளும் சரி தீவிரவாதிகளும் சரி, வசதியற்றவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் - ஆகியோரோடு எந்தவிதத் தொடர்பும் கிடையாது"

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 144 to 146.

No comments: