கடவுள் உருவங்களை வீட்டில் வைத்து. பார்ப்பன புரோகிதர்களை வைத்து - திணமும் பூசை செய்யும், பழுத்த வைதீகராக இருந்த தியாகராயரின் தன்மானத்தை உரசிப் பார்த்தது ஒரு நிகழ்ச்சி.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குடமுழுக்குக்கு ரூபாய் 10000 நன்கொடை கொடுத்தார் தியாகராயர். அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடிக்கும் மேல். நன்கொடை பெற்றுக் கொண்ட பார்ப்பனர்கள் அழைத்த காரணத்தால் குடமுழுக்கிற்க்கு சென்றார்.
அங்கே அவரிடம் வேலை செய்து சம்பளம் வாங்கும் பார்ப்பனர்கள், மேடையில் உட்கார்ந்து கொண்டு "சூத்திரனெல்லாம் மேடைக்கு வரக்கூடாது கீழே நில்" என்றார்கள்.
டாக்டர் நடேசனாரின் தொடார்பு, டாக்டர் நாயரின் அறிவுபூர்வமான பார்ப்பன எதிர்ப்பு வாதங்கள் காரணமாக படிப்படியாக வைதீகத்தின் பிடியில் இருந்து விடுபட்டு வந்த தியாகராயர் வெகுண்டெழுந்தார். காரோட்டியை அழைத்து "நாயரின் இல்லத்திற்கு காரை விடு என்றார்.
1916 டிசம்பர் 20 ம் நாள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கொள்கை விளக்கக் கூட்டம் சென்னை விக்டோரியா மண்டபத்தில் மண்டபத்தில் நடைபெற்றது. தென்னகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரள் வாழ்த்தொலிகளை எழுப்ப - நிறுவனர்களில் ஒருவரான சர்,பி. தியாகராயர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டார்.
திராவிடர் இயக்கதின் விடுதலை சாசனம் என்று இன்றளவும் போற்றப்படும் அந்த அறிக்கை;
இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 4 கோடி 50 லட்சம்மாகும். அதில் 4 கோடிக்கு குறையாதவர்கள் பார்ப்பனரல்லாதார், வரிசெலுத்துவோரில் பெரும்பான்மையோரும் அவர்களே, மேலும் குறுநில மன்னர்கள், பெருநிலக் கிழார்கள், விவசாயிகள் ஆகியோரும் பார்ப்பனரல்லாதவரே.
உண்மையில் அரசியல் என்ற பெயரால் நடைபெறும் இயக்கங்களில் பங்குகொள்ள உரிமை இருந்தும் அவர்கள் அதில் பங்கு கொள்ளவில்லை. மக்களிடையே அவர்களுக்குள்ள செல்வாக்கை நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிதும் அவர்கள் பயன்படுத்தவில்லை.
அவர்களுடைய சார்பில் உண்மையை வெள்ப்படுத்துவதற்கு அவார்களிடம்பத்திரிகைகளும் இல்லை, 15 லட்சம்பேர்களே உள்ள பார்ப்பனர்களின் நிலையைக் கவனிக்கும் போது, இவர்களுடைய அரசியல் வாழ்க்கை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.
நூல் ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 41 to 42.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - தியாகராயரின் தன்மானத்தை உரசிப் பார்த்தது ஒரு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment