Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம்

சுவாமி தீர்த்தாஜி மகராஜ் என்பவர் இந்து ஏகாதிபத்தியத்தின் அபாயம் என்னும் நூலில் எப்படி ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவில் பார்ப்பணீயத்தை உயர்த்தி விட்டது என்பதற்குப் பத்து உதாரணங்களை காட்டுகிறார்.

1. ஆங்கிலேயர்கள் மிக உயர்ந்த நம்பிக்கைகுரிய லாபம் தரும் பதவிகளில் நியமித்தனர்.
2.கம்பெனி அதிகாரிகளுக்கும், புரோகிதர்களுக்கும் ஒருவருக்கொருவர் லாபம் தரும் வகையிலும், பொழுதுபோக்கும் வகையிலும் அழிந்துபோன கோவில்களையும், விக்ரக ஆராதனை உற்சவங்களையும், அதோடு சேர்ந்த நடன மாதரையும் ஊக்குவித்தனர்.

3. இந்துக்களின் கொடுங்கோன்மைச் சின்னமான " ஜாதிக் கச்சேரி" களைப் (நீதிமன்றங்களை) புதுப்பித்தனர்.

4 இந்துக்களின் பெரும்பான்மையோரின் சிந்தனையிலிருந்து மறைந்த ஒழிந்துபோன மனு சாஸ்திரத்தையும், இதர சாத்திரங்களையும் மறுபடியும் கண்டுபிடித்து அதுவே அதிகாரபூர்வமான இந்துச் சட்டம் என்கிற நிலைக்கு அவற்றை உயர்த்தினர்.

5. கோவில்களின் நிர்வாகத்தை அறங்காவலர்கள் கையில் ஒப்புவித்து, பார்ப்பனீயம் வலுப்படவும், இதர சாதியினர் உரிமை இழக்கவும் ஏற்பாடு செய்தனர்.

6. சில சட்டங்கள்  மூலமாகவும், நீதிமன்ற முடிவுகள் மூலமாகவும், கிறித்துவர்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லாத அனைவரையும் கட்டுப்படுத்துவது இந்துச் சட்டம் தான் என்கிற நிலையை உறுவாக்கினர்.

7. சாதிப் பிரிவுகளுக்கு அவர்கள்  ராஜாங்க அங்கீகாரம் கொடுத்தனர். அரசுப் பாதுகாப்பும், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

8. இந்த இழிநிலைமையை மாற்றியமைக்கும் சீர்திருத்தவாதிகளின் நம்பிக்கைகளை நாசமாக்கினார்கள்.

9. மத விஷயங்களில் தலையிடுவதில்லை என்று கூறிக்கொண்டு, சமுதாயக் கொடுமைகளை பலப்படுத்தினார்கள், நிரந்தரமாக நிலவச் செய்தார்கள்.
10. அவர்களில் சிலர் சாதிமுறையையும் விக்ரக ஆராதனையையும் மனித சமுதாயத்தை மகிழ்விக்க வந்த கலாச்சார சாதனைகள் என குறிப்பிட்டு புகழ்ந்தனர்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 119 to 120.

No comments: