Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - கல்வி கற்றோர் புள்ளிவிவரம்

 1901 ஆம் ஆண்டில் கல்வி கற்றோர்  புள்ளிவிவரத்தையும், 1921 ஆம் ஆண்டுக் கணக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களைப் போல் இல்லாவிடினும் - மெல்ல மெல்லக் கல்வி கற்பதில் முன்னேறி வந்திருப்பது தெறியும்.

தாமதமாக நுழைந்திருந்தாலும் பார்ப்பனரல்லாத சமுதாயங்கள் முன்னேரத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள், செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர் கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர்களில் காணப்படுவதைவிட சில பார்பனரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (பெண் - ஆண் இருபாலரும்) கல்வி கற்கும் நிலை இருக்கிறது.

கல்வி இலாக்காவினர் பார்ப்பன பெண்களுக்கும், குறிப்பாக பார்பன விதவை பெண்களுக்கும் ஏதோ அவர்கள்  பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக் கொண்டு கல்விச் கலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் நாயர் பெண்கள் அளவுக்கு  பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு துறைகளில் பிராமணரல்லாதார் பயனுள்ள வகையில் - இந்த மாகாணத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வாருகின்றனர். பார்ப்பனர்கள் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்தியோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் ! அறிவுத் துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் தேர்வில் வெற்றி பெற தனித்திறமை வேண்டும் என்பதை மறுக்கவில்லை.

புரிந்துகொள்ளமுடியாதது என்னவெனில், மற்றவர்களை விட ஆங்கிலம் கற்ற ஆடவர்களை அதிகம் கொண்டிருக்கிற  ஒரு சிறு வகுப்பு, மற்ற வகுப்பினர் திறமையானவர்களாகவும்,அறிவு கூர்மையானவார்கள் அதிகம் இருப்பினும் அவர்களுக்கு அரசு வேலைகளில் இடம் கொடுக்காமல் , உயர் பதவி, தாழ்ந்ததுமான அனைத்தும் அவார்களுக்கே வழக்குவதுதான். நீதிபதிகள், சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பெரிய முக்கிய எஸ்டேட்களை நிர்வகிப்பவர்களாக மேதைகளை பார்ப்பனரல்லாத சமூகம் வழங்கியிருக்கிறது, அவர்களில் ஈடாக பார்ப்பன சமூகத்தில் ஒருவரை கூட ஒப்பிட முடியாது.

நூல்.    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ;  123 to 125.

No comments: