1934 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி, மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது அப்போது தலைவராக இருந்த ராஜா சர் முத்தையா செட்டியார் முதல் மேயரானார். அது முதல் மேயரை வணக்கத்திற்குரிய மேயர் (Worshipful Mayer) என்று அழைக்கப்படும் சம்பிரதாயம் ஏற்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு வணக்கத்திற்குரிய மேயர் என்ற சொல்லிற்குப் பதிலாக மரியாதைக்குறிய மேயர் (Respected Mayer) என்று மாற்றி அமைத்தது.
சென்னை மாமாநகராட்சியின் மேயர் பதவி வகிப்பவர்கள் அணியும் தங்கச்சங்கிலி, வெள்ளிச்செங்கோல், மேயர், துணை மேயர்களின் இருக்கைகள், மாமன்ற உறுப்பினர்களின் அறை அத்தனையும் ராஜா சர் ராஜா முத்தையா செட்டியார் மாநகராட்சிக்கு அன்பளிப்பாக வழங்கியவை இதற்கு மரியாதை செய்யும் விதமாக அவருக்கு தனியே வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் அத்தனைக்கும் பத்து ரூபாய் மட்டுமே அப்போது மாநகராட்சி வரியாக விதிக்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டூ முத்தையா செட்டியாரின் சகோதரர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் மேயராகப்பதவி ஏற்றார். மாநகராட்சிக்கென தனிக்கொடி உறுவாக்கியவர் அவர் தான். மூவேந்தர்களின் சின்னமான வில், புலி, கயல் மூன்றையும் நீலநிறப் பின்னனியில் பொறித்து உருவாக்கப்பட்ட கொடி மேயர் சென்னையில் இருக்கும்போது மாநகராட்சி மன்றத்தில் பறக்கும் இல்லாத போது கொடி இறக்கப்படும் இந்த நடைமுறையை ஏற்படுத்தியவரும் அவர்தான்.
நகருக்கு வரும் பிரபலங்கள் எவராக இருந்தாலும் அவரை மேயர்தான் முதலில் வரவேற்க வேண்டும். என்ற ஒழுங்கு முறை இன்றும் நடைமுறையில் இருக்கிறது சுழற்சி முறையில் ஒவ்வொரு வகுப்பாரும் ஓராண்டு மேயராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற நடைமுறை ராஜா சர் முத்தையா காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இப்போது மேயரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என மாற்றப்பட்டுவிட்டது.
படம் ;ராஜா சர் முத்தையா.
நூல் ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 20 to 21.
No comments:
Post a Comment