சென்ற மாதம் நடந்த என் சொந்த(30-6-18) நிகழ்வோடு தொடங்குகிறேன்.
கடவுள் இல்லை என்று நான் நம்ப தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆக போகிறது.இத்ததனை ஆண்டுகளில் எத்தனை நிகழ்வுகள் எத்னை தர்ம சங்கட சூழ்நிலைகள் அனைத்தையும் நாத்திகனாகவே கடந்து விட்டேன்.
என் பாட்டிக்கு முதலாம் ஆண்டு திவசம் கொடுக்கும் விடயத்தில் எனக்கும் அம்மாவுக்கும் ஒரு வாரமாக வாக்குவாதம் நடக்கிறது.கடைசியில் ஒரு வார்த்தை சொல்லி அம்மாதான் வென்றார்.
ஆமான்டா,நான் அண்ணன் தம்பிகூட பிறந்திருந்தா எங்க அம்மாவுக்கு எல்லாத்தையும் அவனுங்க நல்ல முறையில செஞ்சிருப்பானுங்க.நான் கூட பிறப்பில்லாம கெடக்குற அனாதை தானே அதான் இவளோ கெஞ்ச விடுறீங்க.
இதுதான் அம்மா சொன்னது.இந்த ஒற்றை வரியில் என் அம்மாவின் இளமை காலத்து பாசத்தின் ஏக்க போராட்டம் என் கண் முன்பே தோன்றி மறைந்தது.கண்ணீரை மறைத்துகொண்டு ஒப்புக்கொண்டேன்.
ஒரு புறம் நம் கொள்கைக்கு துரோகம் செய்கிறோமே என்ற உறுத்தல் இருந்தாலும் அம்மாவிற்க்காக சகித்துக்கொண்டேன்.
இங்கிருந்து தொடங்குவோம்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு,பலர் கேள்விபட்டிருக்க கூடும்.அங்குதான் சரியாக காலை 6 மணிக்கெல்லாம் எத்தியாயிற்று.
ஒரு சிறிய பேரூராட்சி இவ்வளவு பரபரப்பாகவும் சுறுசுறுப்பாவும் இயங்குகிறதா என்று ஆச்சசரியபட்டால்,போக போகதான் புரிந்தது அதன் காரணம்.
சென்றவுடன் முதல் வேளையாக காய்கறி பச்சரிசி பருப்பு எல்லாம் சேர்த்து 700ரூபாய்க்கு வாங்கியாயிற்று.
திவசம் கொடுக்கும் மண்டபத்துக்குள் நுலைந்தால்....அப்பப்பா எவ்வளவு கூட்டம்.மூன்றாம் வேற்றுமை நாள் காரியம்.16ஆம் நாள் காரியம் வருட திதி என்று பல வகையில் சூத்திரர்கள் காத்து கிடக்கின்றனர்.
ஒரு வழியாக ஒரு ஐயரை பிடித்து காரியம் செய்ய தேவையான ஏற்ப்பாடுகளை அம்மா செய்துகொண்டிருந்தார்.அதற்க்குள் நான் குளித்துவிட்டு ஈர துணியுடன் வந்து முதன்முதலாய் மிக அருகில் ஒரு பிராமணனை சந்திக்கிறேன்.
வெறும் மூன்றே நிமிடங்கள் தான் ஐயர் தனது மந்திரங்கள் அனைத்தையும் ஓதி முடித்து எழ சென்னார்.காரியம் முடிந்தது.
அம்மா அவருக்கு 1000ரூபாய் கொடுத்தார்.நான் மீண்டும் குளித்துவிட்டு உடுத்தி வந்த புதிய ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.
இதில் கொடுமை என்னவென்றால் காரியம் செய்ய ஐயர் ஆபர் வேறு தருகிறார்.300,500,800,1000,1500.இதில் நம் வசதிற்க்கேற்ப்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.இந்த 300க்கும்.1500க்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் காரியம் செய்ய ஐயர் ஆபர் வேறு தருகிறார்.300,500,800,1000,1500.இதில் நம் வசதிற்க்கேற்ப்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.இந்த 300க்கும்.1500க்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.
எல்லாம் சரி.ஒரு ஆச்சாரமான பிராமணனுக்கு எப்படி ஒரு சூத்திரன் வாங்கி கொடுத்த அரிசியும் காய்கறிகளும் ஒத்துக்கொண்டது என்று தெரியவில்லை.
இருந்த இடத்தில் இருந்தே ஒரு நாளைக்கு 8லிருந்து 15ஆயிரம் வரை சம்பாதித்து விடுகிறார்.அத்தனையும் சூத்திரனின் பனம்.சூத்திரனை ஏற்க்கமாட்டேன்.ஆனால் அவன் தரும் பனத்தை தவிற்க்க மாட்டேன்.
எல்லாம் சரிதான் இதுல பிராமணனின் தந்திரம் எங்கே இருக்கிறது.என உங்களின் கேள்வி என் காதுகளுக்கு கேட்க்கிறது.
என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ ஆபுரண்யஹா
அவபத்ய நாம.
அன்னவ் வ்ரதோ ஆபுரண்யஹா
அவபத்ய நாம.
என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னை பெற்றாளோ தெரியவில்லை.ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாக கருதுகிறேன்.அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும்.
இதை எத்தனை இந்துக்களுக்கு தெரியும் என்பது சந்தேகம் தான்.
அப்படி திவசம் கொடுக்கவில்லை என்றால் என்னன்ன விளைவுகள் நேரும் என்பதை கருடபுராணம் சொல்கிறது.
ஆரோக்கிய குறைபாடு, அகால மரணம், திருமண தடை,தீய பழக்கங்கள்,ஊனமுடன் குழந்தை பிறத்தல்.மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை பிறத்தல்,என்று இன்னும் நிறைய நீள்கிறது.
இப்போது புரிகிறதா பார்பண தந்திரம்.
என் தாய்த்தமிழ் இரத்தங்களே தயவு கூர்ந்து வருடவருடம் தேவையில்லாமல் வெறும் மூன்று நிமிடத்தில் 1000,2000காசை கொடுத்து நம் தாய் தந்தையை கொச்சை படுத்துவதை விட...
ஒன்றும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உங்கள் தாய் தந்தையை மனதில் நினைத்து அவர்களுக்கு வயிறார ஒரு வேளை உணவளியுங்கள்.அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய ஆத்ம திருப்தி.
ஒன்றும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உங்கள் தாய் தந்தையை மனதில் நினைத்து அவர்களுக்கு வயிறார ஒரு வேளை உணவளியுங்கள்.அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய ஆத்ம திருப்தி.
No comments:
Post a Comment