தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த காத்தவராயனும் உயர்குலமாக்கப்பட்ட குலத்தில் பிறந்த பெண்ணான ஆரியமாலாவும் காதலித்து திருமணம் செய்துகொள்ளுகின்றனர்.
இந்த மாபெரும் குற்றத்திற்காக காத்தவராயன் களுவிலேற்றி கொல்லப்படுகிறான்.
இந்த மாபெரும் குற்றத்திற்காக காத்தவராயன் களுவிலேற்றி கொல்லப்படுகிறான்.
மேலோட்டமாக படிப்பவர்களுக்கு எதுவும் புரியப்போவதில்லை. ஆழமாக பாருங்கள்.
"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"
என்று கடவுள் பெயரால் சாதியை உருவாக்கி, மனிதரிடையே பிழவுகளை உண்டாக்கி, தான் அரசனுக்கும் மேலான முதலாவதான சாதியாக மேலே உட்கார்ந்துகொண்டு மற்றவனை அடிமைப்படுத்தி இருந்த இடத்தில் உண்டி வளர்க்கும் தந்திரம்....
இது மற்றவனுக்கு புரியக்கூடாது என்பதற்கு கடவுள் கூறினார் என்று புனை கதைகளை கூறுவான். நமது முட்டாள்களும் அதை நம்பி தமக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு பார்த்து அடித்துக்கொள்வர்.
உதாரணத்திற்கு காத்தவராயனின் கொலைக்கு புராணம் கூறும் கதை.. உண்மையை மூடி மறைக்க பார்பானின் தந்திரம்..
...தேவலோகத்தில் நந்தவனத்தைக் காவல் காக்கும் பொருட்டு சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் இவர். அங்கு சப்த கன்னிகள் நீராட வருகிறார்கள். அப்போது சப்த கன்னிகளில் ஒருத்தியான ஆரியமாலா மீது மையல் கொள்கிறார் இவர். சப்த கன்னிகள் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். “ பெண்ணாசையினால் நீ இந்தத் தவறினைச் செய்துவிட்டாய். பூவுலகில் மானிடனாகப் பிறந்து பெண்ணாசையினால் தண்டனை பெற்று கழுவேற்றம் ஆகி தேவலோகம் திரும்பு” எனச் சாபமிடுகிறார் சிவபெருமான்.
அதன்படியே பூமியில் பிறந்து ஆரியமாலாவின் மீது மையல் கொண்டு பிடிபட்டு கழுவேற்றப்படுகிறான் காத்தவராயன். கருணை உள்ளம் கொண்டவன் இறைவன். அவனே ஈர நெஞ்சினன். கழுவேற்றபட்ட காத்தவராயனை அவன் தேவலோகத்துக்கு அழைத்துக் கொள்கிறான்.
இது புராண கதை..!
இது புராண கதை..!
இவ்வாறு ஒவ்வொரு அநீதிக்கு பின்னும் ஒரு புராண கதை கடவுளின் பெயரால் இருக்கும்.
No comments:
Post a Comment