Thursday, July 12, 2018

#திராவிடம்அறிவோம் (2)

#திராவிடம்அறிவோம் (2)
அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பனகல் அரசர் கருதினார். இதற்காக நீதிக்கட்சி அமைச்சரவை ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் இடம்பெற்று, படிக்க வாய்ப்பளிக்கும் திட்டமே அது. இதனைப் பனகல் அரசரும் ஏ. பி. பாத்ரோவும் உருவாக்கினர். பெரும்பாலான அரசுக் கல்லூரிகளின் பொறுப்பு பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. இந்தத் தடையை நீக்குவதற்குக் கல்வி அமைச்சர் ஏ. பி. பாத்ரோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என ஏ. பி. பாத்ரோ ஓர் ஆணையைப் பிறப்பித்தார். இதற்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

திராவிடத்தால் வாழ்ந்தோம்.

No comments: