Thursday, July 12, 2018

பிரம்மன், மகளான சரஸ்வதிமீது மோகித்து அவளை புணர துரத்திய கதை

http://pallavar.blogspot.com/2018/07/blog-post_47.html

பிரம்மன், மகளான சரஸ்வதிமீது மோகித்து அவளை புணர துரத்திய கதை.
அர்த்தமுள்ள ஆரிய இந்துமதம் சொல்லித்தருகிறது. ஆரியனுக்கு சொம்புதூக்கும் தமிழர்களே தெரிந்துகொள்ளுங்கள்.
சரஸ்வதி பிரம்மனுடைய விந்தணுவில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கூறி அதற்கு உடன் படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து தகப்பனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்து வைத்ததாக பாகவத புராண கதை சொல்லுகிறது.
கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லி க்கொண்டு இருந்தார்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் கல்வி எல்லோருக்கும் கிடைத்ததால் இவர்கள் புராண இதிகாச குப்பைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதனால்தான் சூத்திரன் படித்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றவேண்டும் என்ற தண்டனையை சட்டமாக்கி வைத்திருந்தான் பார்ப்பான். இந்த ஆரிய சூழ்ச்சிகளை தமிழர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

No comments: