கேள்வி: திமுக ஏன் எப்போது பார்த்தாலும் வெளிநடப்பு செய்கிறது. ஆளும்கட்சி செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டுமா.?
பதில்: ஆம். கண்டிப்பாக எதிர்த்து தான் ஆக வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம். இதற்கு ஒரு உதாரணம் சொன்னால் சரியாக புரியும்.
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் என்று ஒருவர் இருந்தார். அறிஞர். தந்தை பெரியாரின் வலது கையாக விளங்கியவர். அவர் இந்தியாவினுடைய ஆலோசகராக லண்டனுக்கு சென்ற போது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் எதிர்க்கட்சியாக இருந்த போது அவரை பார்த்து காங்கிரஸ் காரர் ஒருவர் கேட்கிறார்,
"நீங்கள் சட்டசபையில் இருந்து எதை எடுத்தாலும் அதை எதிர்த்து பேசியிருக்கிறீர்களே. காங்கிரஸ் ஆட்சி செய்யும் நண்பர்களை கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் பேசியிருக்கிறீர்களே" என்று கேட்டார்.
அதற்கு அவர், "ஆமாம் எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் பேச வேண்டும். எதிர்க்கட்சிக்கு என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் பேச வேண்டும்" என்றார்.
உடனே அவர், "சரி நாளைக்கு ஆதிதிராவிட மக்களுக்கு அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வீடு தருவதாக காங்கிரஸ் அரசு அறிவித்தால் அதை எதிர்ப்பீர்களா ஆதரிப்பீர்களா.?" என்று கேட்டார்.
"ஆதரிப்பேன். ஆதரித்து விட்டு ஒரு யோசனை சொல்வேன். வீடு கொடுத்தால் மட்டும் போதாது. வீடு கொடுத்து விட்டு வீட்டுக்கு 200 ரூபாய் தர வேண்டும் என்றும் சொல்வேன். அதுதான் எதிர்க்கட்சி காரனுடைய இலக்கணம்" என்றார்.
அவரைத்தான் parliamentarian, பாராளுமன்ற வித்தகர், தந்தை பெரியாருடைய மாணவர், அறிஞர் அண்ணாவினுடைய தோழர், எங்களுக்கெல்லாம் தலைவர் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.
விமர்சனங்களில் வளர்ச்சிக்கான விமர்சனம் வீழ்ச்சிக்கான விமர்சனம் என்று இருவகை உள்ளது. ஆங்கிலத்தில் constructive criticism, destructive criticism என்று கூறுவர். இதில் திமுக செய்வது முதல் வகையை சேர்ந்தது. வளர்ச்சிக்கான விமர்சனம் constructive criticism. போக்குவரத்து துறையின் நஷ்டத்தை குறைக்க ஆலோசனை கூறியதில் இருந்து காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவித்ததில் இருந்து நீட் எதிர்ப்பு மீத்தேன் எதிர்ப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு நியூட்ரினோ எதிர்ப்பு, இன்று லோக் ஆயுக்தா சட்டமசோதா எதிர்ப்பு வரை திமுக செய்து வருவது வளர்ச்சிக்கான விமர்சனங்களே.
இதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம். அளவே வக்கில்லாதவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் தான் அடிக்கடி வெளிநடப்பு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியால் காட்ட முடிந்தது அதிகபட்ச எதிர்ப்பே வெளிநடப்பு மட்டும் தான்.
அதனால் சட்டசபையில் வெளிநடப்பு செய்வதால் என்ன ஆகிவிடும்.?
எல்லா திட்டங்களையும் எதிர்க்கலாமா.?
செயல்படுவதே இல்லை
போன்ற ஆஃபாயில் தனமான விமர்சனங்களை வைக்காமல் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பேசுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது...
No comments:
Post a Comment