(மன்னர்கள் காலத்தில் அடித்துவிட்ட கதை. வாருங்கள் கேட்போம்.)
பூமியில் சிந்திய சிவனின் இந்திரியமும் (விந்து) அது பொறுக்காமல் பார்வதியின் சாபமும்.
சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் கலவி நடந்ததாம். பூமி தாங்காது என்று தேவர்கள் முறையிட்டு கலவியை நிறுத்தும்படி கெஞ்சினார்களாம். அதன் விளைவு சிவனின் விந்து ஆறாகப் பெருக்கெடுத்ததாம்.
அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில். (ஐய்ப்பசி 14 - அக்டோபர் 31) இது ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில். (ஐய்ப்பசி 14 - அக்டோபர் 31) இது ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
நவராத்திரி முடிந்தது, தீபாவளியும் கழிந்தது அடுத்து சுரண்டலுக்கு வழி தேட வேண்டாமா? இருந்த இடத்தில் உண்டி வளர்க்க வேண்டாமா? அதற்கான ஏற்பாடுதான் கந்தசஷ்டி.
ராமநவமி, கிருஷ்ணன் அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி. கடவுள் பிறப்பு, இறப்பு அற்றவன் என்று சொல்லிக் கொள்வார்கள்; ஆனால் கடவுள்களின் பிறப்பும் அதற்குப் பிறந்த நாள்களும். இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.
சரி உண்டிவளர்க்க திட்டம் தீட்டியாகிவிட்டது, வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?
சிவனை வேண்டினர். கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண்டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் உடலுறவு நடந்ததாம்.
சிவனை வேண்டினர். கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண்டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் உடலுறவு நடந்ததாம்.
இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறையிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.
அதன் விளைவு சிவனின் இந்திரியம் ஆறாகப் பெருக்கெடுத்ததாம். தேவர்கள் கைகளில் ஏந்தி சிவனின் விந்தை குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீபுரத்தில் உள்ள கரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.
மீதி வீரியத்தை கங்கையில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற்றாம்.
ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் கைகள் பன்னிரெண்டாகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம்.
இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரியம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலிருந்து பிறந்ததால் ஸ்கந்தன் - கந்தன் என்று பெயராம்.
இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண்டாட வேண்டும்.
முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழனி, பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை செய்கிறார்கள் பக்தர்களிடமிருந்து!
அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான். தனக்குரிய விந்தை பூமாதேவி தாங்கியதால் பார்வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.
உன்னை மாறி மாறி அரசர்கள் புணரக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்! இதனால்தான் மன்னர்கள் மாறி மாறி நிலத்தை ஆள்கிறார்களாம்!
காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?
-தகவல்கள் இராமானுஜ தாத்தாசாரியாரின் இந்துமதம் எங்கே போகிறது என்ற நூலில் இருந்து.
No comments:
Post a Comment