Thursday, July 12, 2018

ஆரியர்கள் திராவிடர்கள் - 2

பார்ப்பனர், பார்ப்பனீயம் போன்ற சொற்களை கேட்கும் நடுநிலைகள், மற்றும் சக தோழர்களுக்கு சிறிது என்மேல் கோபம் வரும். பொறுத்து கொண்டு விளக்கத்தை கேளுங்கள். அய்யா சுப வீ இதற்கு ஏற்கெனெவே சில முக்கிய விளக்கங்களை கொடுத்து இருக்கிறார். அதை நான் ஏற்று கொண்ட காரணத்தினால் அவர் கருத்து சாரத்திலேயே நானும் பதிலளிக்கிறேன்.
பார்ப்பனர் என்பது வசை சொல் அல்ல. அதை பாரதியாரை தவிர யாருமே வசை சொல்லாக பயன்படுத்தியது இல்ல.
பாவலேறு பெருஞ்சித்தரனார் சொன்னது போல தச்சு வேலை செய்பவர் தச்சர் என்பது போல, பார்ப்பான் என்றால் கணி பார்ப்பார் சோதிடம் பார்ப்பான் என்பவை ஆகும். சரி ஏன் பிராமணர்கள் என்ற பெயரில் அழைத்தால் என்ன?.
பிராமணன் என்றால் பிரம்மனில் இருந்து வந்தவன் என பொருள். அந்த பிரம்மனையே மறுக்கும் நான் எப்படி அந்த வார்த்தை சொல்லி அழைக்க. தெரியாமல் சில வார்த்தைகளை நான் அழைக்கலாம். ஆனால், தெரிந்தே செய்வது நான் எதிர்க்கும் தத்துவத்தையே ஏற்போது போல் ஆகாதா?.
சரி ஏன் அவர்களை பெரியார் எதிர்த்தார் அல்லது திராவிட கொள்கை எதிர்த்தது?.
பெரியார் அல்லது திராவிட கொள்கை ஏன் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறது?
திருத்தம், பெரியார் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை,
பெரியார் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கவில்லை.
பெரியார் ஆதிக்கத்தை எதிர்த்தார். வர்ணத்தின் பெயரால் அடுக்கு, அடுக்கின் முடிவில் சாதி, சாதிக்குள் உட்சாதி என ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனீயம் என்ற ஆதிக்க மனநிலையை தான் பெரியார் எதிர்த்தார்.
அவர் எந்த குறிப்பிட்ட சமூகத்திற்கும் எதிரி அல்ல. அவர் ஆதிக்கத்தின் எதிரி.
இந்து மத சடங்கில் இருக்கும் இழிவான காரியங்களை அவர் விமர்சித்தார். மற்ற மதங்களை விட இந்து மதத்தின் மீது கடுமையான சொற்போர் தொடுக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதற்கான முக்கிய காரணம் சாதியை மதமே ஆதரிக்கிறதே எனும் கோட்பாடு தான் காரணம்.
ஆக, பெரியார் மூட நம்பிக்கையின் எதிரியே தவிர்த்து, எந்த மதத்திற்கும் எதிரி அல்ல.
இந்து மதத்தை போல அவர் பிறப்பின் அடிப்படியிலான அடையாளத்தை உருவாக்குபவரில்லை. உனக்கு மட்டும் ஏன் பூணூல் என கேட்பார் தூக்கி எறிந்து விட்டால் அவரை திராவிடம் அரவணைக்க தயங்கியதில்லை.
ஆக, "திராவிடம் ஆரியம்" என்பது பெரியாரின் கோட்பாட்டை பொறுத்த வரையில், "ஒடுக்கப்படுபவர் ஆதிக்கம்" என்ற அளவுகோலோடு செங்கோல் ஓச்சுகிறது. ஆனால், ஆரியமோ இன்னும் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது.
பெரியார் வாழ்க...!

No comments: