Thursday, July 12, 2018

‘பிராமணீய மதம்’ தான் ‘இந்து மதம்’ என மாறி இருக்கிறது

இந்தப் படத்தை சற்று உன்னிப்பாக பாருங்கள். இந்தப் படத்தில் இரண்டு மிக முக்கியமான விசயங்கள் அடங்கி இருக்கிறது.
1) இந்தப்படம் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் கூட்டமைப்பில் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில் தான் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற பேச்சு இடம் பெற்றது.
2) இந்தப்படத்தில் இருக்கும் மதங்களின் பெயரில் புத்தமதம் இருக்கிறது. இந்துமதம் இல்லை. இந்துமதத்திற்கு பதில் இங்கே "பிராமணீயம்" என்று இருக்கிறது. அதாவது, 124 ஆண்டுகளுக்கு முன் இந்து மதம் என்பது வழக்கில் இல்லை. ‘பிராமணீய மதம்’ தான் ‘இந்து மதம்’ என மாறி இருக்கிறது என்பதை இதன் மூலம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.
புத்தமதமும் இந்து மதத்தின் பிரிவு என்று சொல்லும் அயோக்கியதனத்தையும் புரிந்துக்கொள்ளலாம்.
இந்திய வரலாறு என்பது புத்த மதத்திற்கும், பிராமணீயத்திற்கும் இடையில் நடந்த போராட்டம் தான் என்பதை இந்த இடத்தில் நினைவு கூறுவோம்!


No comments: