Sunday, July 08, 2018

குலப் பெருமை காட்டுற திருமணங்கள் எந்த வகையிலும் பசுமைத் திருமணங்கள் ஆகாது

பசுமைத் திருமணமாம் வெங்காயம்...
காரும், காளான் பிரியாணியும் கொடுத்தா அது இயற்கை விரோத திருமணம். கம்பஞ்சோறு போட்டு காங்கேயம் காளை தந்தா அது பசுமைத் திருமணமா??

வரதட்சணையா ஒரு சொம்பு குடுக்கறது கூட குற்றம்னு சட்டம் சொல்லுது. இவனுங்க சுயசாதிப் பெருமையை தம்பட்டம் அடிக்கவும், பழைமை, கலாச்சாரம்னு வரதட்சணை என்ற சமூக அநீதியை, பெண்ணடிமைத்தனத்தை எந்தக் குற்றவுணர்வும் இல்லாம அடுத்த தலைமுறை கிட்ட கடத்தவும் "பசுமைத் திருமணம்" னு ஒரு வார்த்தையை டைட்டிலா வெச்சுருக்கானுங்க.  சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாம ஊடகங்களும் இதையே வெளியிட்டிருக்கு.  இதுக்கு படம் வேற கேடு.

ரெஜிஸ்டிரார் ஆஃபீஸ்ல சத்தமே இல்லாம ரெண்டு பேர் போயி மாலை மாத்தி, கூட இருக்கற நாலு ஃப்ரெண்ட்ஸ்க்கு சாப்பாடு வாங்கி கொடுத்து நடக்குற திருமணங்கள் தான் உண்மையிலேயே பசுமையான திருமணங்கள்.

பத்து லட்சம் ரூபாய்க்கு மண்டபம் எடுத்து, சீரியல் செட்டு கட்டி, கார்ல வர்ற ஒறவுக்காரன மரியாதையா உபசரித்து, எலையில தேவைக்கு அதிகமான உணவுப் பொருட்களை வெச்சு வீணடிச்சு, வசதி வாய்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டி, கடைசியா சீதனம் குடுக்கறதுல குலப் பெருமை காட்டுற  திருமணங்கள் எந்த வகையிலும் பசுமைத் திருமணங்கள் ஆகாது. இது நேஷனல் வேஸ்ட்;  சமூக அநீதி; பெண்ணடிமைத்தனம்.

No comments: