Thursday, July 12, 2018

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆங்கில பேச்சு வழக்கில் சில பல சிக்கல்கள் உண்டு

கற்றதும் பெற்றதும்
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆங்கில பேச்சு வழக்கில் சில பல சிக்கல்கள் உண்டு.
1. Accent - பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் பழக்கமிருக்காது என்பதால் ஆங்கிலம் கொஞ்சம் ஹெவியாக இருக்கும். ஆங்கில ஆசிரியர் ஆங்கில மொழிப்பாடத்தை தமிழில் நடத்திய ஆங்கில மீடியத்தில் படித்தவன் நான் என்பதால் ஓரளவு செல்ஃப் எடுத்துவிட்டேன். ஒரு சிலர் எல்லாம் என்ன பேசுகிறார்கள் என்று சக இந்தியர்களுக்கே புரியாது. இதை மாற்றுவதற்கு நிறைய மெனக்கெடல் வேண்டும்.
2. Pitch - பெரும்பாலானவர்கள் மெதுவான குரலில் பேசுவார்கள். தனியறையில் இருவருக்கு இடையில் நடக்கும் உரையாடல் என்றால் சரி, ஆனால் ஒரு பெரிய கான்ஃபரன்ஸ் அறையில் இருந்தால் அந்த கோடியில் இருப்பவர்களுக்கு சுத்தமாக கேட்காது. டெலி கான்ஃபரன்ஸ் எல்லாம் சுத்தம், ஆனால் டெலிகான் எல்லாம் யாரும் கவனமாக அட்டெண்ட் செய்ய மாட்டார்கள் என்பதால் பெரும்பாலும் ப்ரச்னை இருக்காது. நான் சத்தமாக பேசுவதாகவே எனக்கு தோன்றும். ஒருமுறை என் மேனேஜர் சொன்ன பின்புதான் நான் மெதுவாக பேசுகிறேன் என்பதே எனக்கு உரைத்தது. ங்கொய்யால என்று கத்தி பேசி இது எப்படி இருக்கு என்று கேட்க, அதுதான் சரியான பிட்ச் என்று சொன்னார். என்ன கொடுமை சரவணன் என்று அன்றிலிருந்து கத்துவதை - கேட்பவர்களுக்கு நார்மல் - இயல்பாக்கிக் கொண்டேன். Feedback, audio recorder மூலம் இதனை சுலபமாக சரி செய்து கொள்ளலாம்.
3. Dialect - ஐ திங்க் ஷி இஸ் ஸ்பீக்கிங் ப்ரிட்டிஷ் இங்கிலிஸ் என்பது காமெடி இல்லை. இந்தியன் இங்க்லிஷ் பிரிட்டிஷ் இங்க்லிஷை அடிப்படையாக கொண்டது. ப்ரிட்டிஷ் ஆங்கிலத்தின் ஏகப்பட்ட வார்த்தைகள் அமெரிக்க ஆங்கிலத்தில் வேறு. உதாரணம்: லாரி (இந்தியன்) - ட்ரக் (அமெரிக்கன்),
ஃப்ளாட் - அபார்ட்மெண்ட்
லிஃப்ட் - எலிவேட்டர்
ரப்பர் - எரேசர். (அமெரிக்காவில் ரப்பர் என்றால் காண்டம். சிவகுமார் பாஷையில் காண்டோம்)
British Vs American english difference என்று தேடினால் கிடைக்கும். போன வாரம் ஒரு மீட்டிங்கில் பேச்சு வாக்கில் நெவர்தலெஸ் என்ற வார்த்தையை பேச்சு வாக்கில் உச்சரித்த போது என்னை ஒருவர் இடைமறித்து அந்த வார்த்தையை திரும்ப உச்சரிக்க சொல்லி கேட்டு 13 பேர் ஐந்து நிமிடம் மீட்டிங் அஜண்டாவை மறந்து ஜாலியாக அந்த வார்த்தை உபயோகத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
4. Pronunciation - அன்றாடம் புழங்கும் வார்த்தைகளை வேறு மாதிரி உச்சரித்து கேட்கும்போது மக்கள் குழம்பி விடுவார்கள். புரியவில்லை என்று அவர்கள் திரும்ப திரும்ப கேட்க, இவர்களோ அதே பாணியில் திரும்ப திரும்ப சொல்ல என்று இதில்தான் மிகப்பெரிய சிக்கல். என் முந்தைய கம்பெனியில் மேஜேனர் பெயர் Jose. (ஸ்பானிய மொழியில்) ஹோசே என்று உச்சரிக்க வேண்டும். இந்திய ஆஃப் ஷோர் மீட்டிங்கில் இந்திய ஆள் யாராவது ஒருவர் சரியாக ஜோஸ் என்று கூப்பிடுவார்கள். சரியான உச்சரிப்பை சொல்லி அந்த ஆள் பழக ஆரம்பிக்கும் சமயம், புதிதாக ஒரு டெவலப்பர் வந்து ஜோஸ் என்று ஆரம்பிப்பார். கான்ஃபரன்ஸ் ரூம் முழுக்க வெடிச்சிரிப்பு கிளம்பி ஒரு கட்டத்தில் மேனேஜரே மை நேம் இஸ் ஜோஸ் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். தப்பாக உச்சரிக்கப்படும் சில பிரபல வார்த்தைகள்.
வார்த்தை - தவறு - சரி
Pizza - பிஜா - பீ(ட்)ஸா
Jalapeno - ஜலபீனோ - ஹலபீனோ
Lettuce - லெட்யூஸ் - லெட்டஸ்
மரிஜுவானா - மரி(யு)வானா
Iron - ஐரன் - அயன்
Coupon - கூப்பன் - கூப்பான்
Data - டாட்டா - டேட்டா
Debris - டெப்ரிஸ் - டெப்ரி
Sour - சார் - சவர்
Suite - சூட் - ஸ்வீட்
Schedule - ஷெட்யூல் -
ஸ்கெஜ்யுல்
Lingerie - லிங்கரி - லாஞ்சரே (ஹிஹி)
இது ஒரு டிப் ஆஃப் த ஐஸ்பெர்க் சாம்பிள்தான். காலப்போக்கில் அப்படியே அங்கங்கே அடிபட்டு கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
குறிப்பு: கொல்ட்டிகள் பஸ்ஸு, காரு, ரெஸ்டாரண்டு, ஒர்க்கு, டைமு என்று ஆங்கிலம் மாதிரியே பேசுவார்கள். அது ஆங்கிலம் அல்ல.

ஐந்தாவதாக cultural significance. ஒரு அட்டகாசமான தண்ணி பார்ட்டி. 95% தேசி, 5% அமெரிக்கர். ஒரு தேசிப்பய அமெரிக்க மேனேஜர் ஒருத்தியை நீ sphinster தானே என கேட்டுவிட அவள் இருந்த மப்பில் கத்திக்கூப்பாடு போட்டு பார்ட்டி பொசுக்கென்று முடிந்தது  சிங்கிளான்னு மீன் பண்ணிருக்கான். இங்க ஸ்பின்ஸ்டர்ன்னா வயசான தனியான கிழவியாம்ல?

நான் இங்க வந்த புதுசுல கொலீக் வீட்டுக்கு போயிருந்தப்போ, நர்சரி ரைம்ஸில் chubby cheeks படிச்ச ஞாபகத்தில், அவரோட 10 வயசு மகள பாராட்டுவதா நினைச்சி you are so chubby என்று சொல்லிவிட்டேன்.அவ செம காண்டாகி யு ஆர் சோ மீன் அது இது என்று கத்தி தீர்த்து விட்டாள். நண்பர் (அவ அம்மா) புரிந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர விழுந்து விழுந்து சிரிக்கிறார். எனக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை

Chubby cheeks.. நர்சரி ரைம்ஸ்ல வருமே. குஷ்புவுக்கு கோயில் கட்ன நம்மூர்ல கொழுக் மொழுக்னு இருக்கன்னு சொன்னா குழந்தைகள் அம்மாக்கள் எல்லாரும் பெருமைப்படுவாங்க. இந்தூர்ல chubbyன்னா குண்டுங்கிற அர்த்தத்துல எடுத்துக்குறாங்க. 

“நீ ரொம்ப குண்டாயிருக்க”ன்னு ஒரு பொண்ணுகிட்ட சொல்லியும் உயிரோட மீண்டு வந்தேன்னா அதுக்கு காரணம் நல்ல வேளையா அவளுக்கு பத்து வயசுதான்கிறதாலதான்.

வடமேற்கு இந்தியர்களுக்கு 'ஸ்' உச்சரிப்பு மகா தகராறு.  வடமேற்கிந்தியர்களுக்கு 'ஸ்'க்கு முன்னர் 'இ' சேர்த்தே ஆகவேண்டும். இஸ்கூல், இஸ்டாப், இஸ்கேல் என்று இ-யில்லாத ஸ்ஸே கிடையாது. சுருளிராஜன் ஒரு படத்தில் சிறுவனை 'ஏண்டா உனக்கு 'சா'வே வராதா?' என்று வைவார். அதுபோல் இன்னொரு க்ரூப்புக்கு 'ஷா'வே வராது. நேசன், கண்டிசன், ஃபேசன், மோசன், காசன் என்று ஒரு கோஷ்டியும் ஐ வெண்ட் டு இஸ்க்கூல் இஸ்டாப் என்று இன்னொரு கோஷ்டியும் வாக்கியத்தின் நடுநடுவே ஹிந்தி 'கீ' யை நுழைத்து (மத்லப் வாட் அயாம் சேயிங் கீ டுமாரோ நெவர் டைஸ்) இன்னொரு கோஷ்டியுமாக


No comments: