Thursday, July 12, 2018

நான் சீதாராமன் பேசுறங்க

நான் சீதாராமன் பேசுறங்க
அய்யோ அவசரப்பட்டு திட்டிராதீங்க நீங்க நினைக்கிற சீதாராமன் இல்லை நான் ராமன் மனைவி சீதா பேசுறேன்
நீங்களே நியாயம் சொல்லுங்க
எனக்கு திருமணமான போது வயது 8 எந்த மாக்கானாவது 8 வயசு குழந்தைய கல்யாணம் செய்வானா
8 வயசு குழந்தை மேல எவனுக்காவது காதல் வருமா
ஆனா ராமருக்கு வந்துச்சு
சரி வந்து தொலையட்டும் எனக்கு மாப்பிள்ளையை எப்படி தெரியுமா முடிவு செஞ்சானுக
வில் முறிக்கும் போட்டி வைச்சானுக அன்னைக்கு அந்தப் போட்டியில் வென்றது நம்ம பவர்ஸ்டாரா இருந்தாலும் நான் கட்ட வேண்டியது தான்
என்னடா பவர்ஸ்டாரானு பதறாதீங்க பவர்ஸ்டாரா ஜெய்சங்கராங்கிரது மேட்டரில்லை என் கணவனை நான் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை என்பது தான் பிரச்சனை
சரி தொலைஞ்சு போகட்டுனு கட்டித் தொலைஞ்சேனே வாழ விட்டானா சன் டிவி சீரியல்ல வருகிற மாதிரி சந்தேகப்பட்டே கொன்னான்
கடைசியா தீயில் இறங்கி கற்பு ஒரு 1/2 கிலோ வாங்கிட்டு வந்தேன்.
அப்புறமும் பிள்ளை வயித்தில் இருக்கும்போதே சந்தேகபட்டு நடு காட்டில துரத்தி விட்டுட்டான்.
பாருங்க மக்களே மொத்தம் மூன்று குற்றம்
முதல் குற்றம் குழந்தை திருமணம்
இரண்டாம் குற்றம் கட்டாய திருமணம்
மூன்றாவது சந்தேகத்தால் தற்கொலைக்கு தூண்டியது
இத்தனை பிரச்சினையையும் அன்னைக்கு எனக்கு பேசுற தைரியம் இல்லை மக்களே
இப்ப தான் யாரு அந்த பொன்னு ம்ம் கவுசல்யா இவனுகள கிழிச்சி தொங்க விடுதாமுல
அதப் பார்த்து தான் எனக்கும் தைரியம் வந்துச்சு அதான் கொஞ்சம் கழுவி ஊத்திட்டு போகலானு வந்தேன்
இத்தனை தைரியத்துக்கும் காரணம் பெரியார் தான் என்றும் தன் வாழ்க்கையை கெடுத்த தந்தை என்னை பெற்றதால் மட்டும் தந்தை ஆக மாட்டார் என்றும் தனக்கு வழிகாட்டிய பெரியார் தான் தந்தை என்றும் சொன்னது எனக்கும் பொருந்தும்
கவுசல்யாவின் பேட்டியைப் பார்த்த பிறகு நானும் பெரியாரை படித்து விட்டதால் நானும் சொல்கிறேன்
எனக்கும் தந்தை பெரியார் தான் ஜனகர் அல்ல.
படித்ததில் பிடித்தது.

No comments: