Thursday, July 12, 2018

#திராவிடம்அறிவோம் (4)

#திராவிடம்அறிவோம் (4)

"வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் எளிதில் இந்தியைக் கற்றுக் கொள்வார்கள். வியாபாரம் செய்யவும், அரசியல் பண்ணவும் இந்தியைக் கற்றுத் தெளிதல் வேண்டும். ஆகவே பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்”.

இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக 14.07.1937 இல் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தக்ஷிண பாரத இந்திப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது இது.

முதல்வர் ஆன பின்னர், 10.08.1938 இல் தியாகராய நகரிலுள்ள இராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராஜாஜி இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிவித்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது.

No comments: