ஆலயங்கள் தேவிடியா கூடமா ? - இந்தாளு உருப்படியா சொன்னது இதுவாதான் இருக்கும்..
தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப்பயணம் செய்தார். அப்பொழுது அவரிடம் கேள்வி ஒன்று மெயில் ஏட்டின் சார்பில் கேட்கப் பட்டது.
தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக்கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களில் இருக்கிறார் என்று நீங்கள் சொல்வதைப்பற்றிப் பலர் குறைபட்டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு,
காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக் கூட நான் விரும்பவில்லை. ஒரு வகையில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான்.
கடவுள் எங்கும் இருக்கிறார். திருடர்கள் வாழும் குகைகளில் கூட இருக்கிறார். ஆனால் அதற்காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவதில்லையே! அதற்குப் பதிலாக ஆலயங்களுக்குத்தானே செல்கிறோம்?
ஆலயங்களில் தூய்மையான சூழ்நிலை நிலவும் என்பதற்காகத் தானே செல்கிறோம்?
அந்தப் பொருளில் தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆலயங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன்.
அதனால் தான் அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்டவன் இருப்பாரோ, அப்படித்தான் இருப்பார் என்று நான் சொன்னேன்.
இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
ஆனால் இந்து சமயத்தின் நலனுக்காகவாகிலும், என்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறவோ, மாற்றவோ முடியாது
SOURCE: -(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 586-587). (ஆனந்தவிகடன் 25.2.2007)
No comments:
Post a Comment