முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லித்தருவது.
இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.
வடநாட்டைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்.
அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. இன்றைக்கு இதை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது என்றார்கள் அன்று. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”
2004 ஆம் ஆண்டில் கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை.
“பிள்ளை இல்லாமல் அந்தந்தக் குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம் (மனு 9-59)“ என மனு அன்றே அயோக்கியத்தனத்திற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டான். இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.
முட்டாளே வரலாற்றை படி. தனது வரலாறு தெரியாத எவனும் தனக்கான எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது.
No comments:
Post a Comment