சுவாஹாதேவி
கேக்குறவன் கேனப்பயலா இருந்தா இதுவும் சொல்வானுகள் இன்னமும் சொல்வானுகள்.
ஐயர் சுவாஹா சுவாஹா என்பாரே என்னவென்று தெரியுமா?
சுவாஹாதேவியை பகவான்கள் அனுபவித்த இன்பக் கதை.
ஒரு பகவானின் அடங்கா காமாந்தகார காதலியை லவட்டிய மற்றொரு அடங்கா காம பகவான்.
தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும்.
இந்த தட்ஷன், பிரகதி என்னும் குமரியுடன் கூடிக் கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன் விளைவாக வந்து குதித்தவள் சுவாஹாதேவி.
இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும் எம மகராஜனையே கொல்லத் துணிந்தன.
பார்த்தான் எமதர்மன். இவளை விட்டால் தனது அழகு என்னும் அஸ்திரத்தால் என்னையே கொன்று விடுவாள் போல, என மயங்கினான்.
சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன். அதற்காக திட்டம் போட்டான்.
சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான்.
தேவைப்படும் போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.
இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டனர். மோகப் போரின் முடிவில் எமனுக்கு பயங்கர களைப்பு. என்ன செய்தான்? அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.
சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். அப்போது அந்த வழியே அக்னிதேவன் நடந்து வர அவனைப் பார்த்துவிட்டாள்.
ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும் என அழைத்து எமன் விழிப்பதற்குள் அவனை ஆசையோடு அணைத்து தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டு ... அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர்.
எமன் தூங்கும் பொழுது இவர்களின் இளமை விழித்துக் கொண்டு விளையாடிக் களித்து தன் ஆவலை தீர்த்துக் கொண்டாள் சுவாஹாதேவி.
சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள் சுவாஹா.
இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம்.
என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.
இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.
எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியை வழக்கம் போல் எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டான்.
சுவஹாதேவியோ அக்னியை எலுமிச்சை பழமாக்கி ஏற்கனவே விழுங்கி விட்டாள். அப்படிபட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கி விட்டான்.
இதனால் என்ன ஆனது?.... அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.
தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?
தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?
விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.
எமன் அசந்த வேளையில்... சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு.
இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு.
எனவே எமனை அழைத்து... உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு என்றார்.
அப்படியே செய்தான்.
வெளியே வந்த சுவாஹாதேவியிடம் ‘உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு’ என்றார் விஷ்ணு.
சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர்.
ஆனால்... சுவாஹாதேவியை அவள் இளமையை ருசித்த அக்னிக்கு ஆசை இன்னும் அடங்கவில்லை.
அழகுப் பதுமையாய் சதைச்சிற்பமாய் சுவாஹாதேவி காத்திருக்க... அக்னியோ சப்தரிஷி மண்டலத்தில் எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு குஷியாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டான்.
இதை தனது மனைவியான சுவாஹாதேவியிடமே சொன்னான்.
அடியேய்... உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சலிப்பாகிவிட்டது. சப்தரிஷி மண்டலத்தில் என்றும் இளமையாக இருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு தேக ஆனந்தம் கொள்ள துடிக்கிறேன் என்றான்.
நான் இருக்க ஏண்டா அவள்களுக்கெல்லாம் ஆசைப்படுகிறாய் என்றல்லவா சுவாஹா கேட்டிருக்கவேண்டும்? கேட்டாளா?... இல்லை.
No comments:
Post a Comment