Thursday, July 12, 2018

அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லித்தருகிறது. இதுபோல் செய்து பயனடையுங்கள்

தேவகுரு ஆகவேண்டுமா? அரசனாக விரும்புகிறீர்களா? சிவனுக்கு சமமான தகுதி அடையவேண்டுமா? சிறந்த கல்விமான் ஆகவேண்டுமா?
கவலையை விடுங்கள். இதோ அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லித்தருகிறது. இதுபோல் செய்து பயனடையுங்கள்.
தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றான்.
''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"
அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து மதம்.
ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, எல்லா ஆணாதிக்கக் கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும்.
விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன.
அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.
''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப
ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்
மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"
அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்.
பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள்.
இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால் தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.
சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?
''... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ
பவேந்" - என்று இந்துமத நூலான மஹோநதி கூறுகின்றது.
இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.
இந்து மத சிவன் பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்கள் ஈறாக இதை எப்படிப் போற்றமுடிகின்றது?
இவை பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்கப் பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது.
இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுமுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும்.
பின் அவளைப் புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான். இவ்வாறு பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.
புணர்வதற்கு, அதுவும் வக்கரித்து இவ்வாறு செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்துப் புரவலர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை.
சுக்கிராச்சாரி போன்ற மண்டைக் கிறுக்கர்களின் அறிவு உளறல்தான் இவை என்று இந்தக் கூத்தின் மூலம் அம்பலமாகின்றது.
நானும் இந்து எனும் அப்பாவி தமிழர்கள் இந்த ஆரிய புரட்டுக்களை புரிந்துகொள்வது அவசியமாகிறது.

No comments: