Thursday, July 12, 2018

#திராவிடம்அறிவோம் (8)

#திராவிடம்அறிவோம் (8)

அன்று பள்ளி ஆசிரியர்கள், பாடநூல் குழுவினர், கல்வித்துறையினர், நூல் வெளியீட்டாளர் முதலிய கல்வி தொடர்பானவர்களில் மிகப் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாகவே இருந்ததால், நன்கு கற்றறிந்த அறிஞர்களுக்குக் கூட விளங்காத சமஸ்கிருதச் சொற்கள் பாடநூல்களில் கட்டுப்பாடாகத் திணிக்கப்பட்டு வந்தன.

1943 இல் வழங்கப்பட்ட அத்தகைய சொற்கள் சில: ஆஹாரசமீகரணம், யோகவாஹி, சாங்கோயத்துவம், நிஷ்காசினி, பாக்கியஜகை, கிருஷித்தொழில்…….

“உழவுத் தொழிலுங் கூடவா தமிழர்க்கு இல்லாது போயிற்று?”

 இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் முதன்முதலாகத் ‘தமிழ்த்தேசியத்தை’ உருவாக்கிற்று: அத்தமிழ்த்தேசியம், தமிழ்ச் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தியது. ’ ஸ்ரீ‘ என்று ஆண்கள் அழைக்கப்படுவது ‘திரு’ என்று மாற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் கூட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தான் முதன்முதலாக எழுப்பப்பட்டது.

No comments: