Thursday, July 12, 2018

பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்

பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்..


இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும்.
இந்த இருமார்க்கமும் தமிழக உழைக்கும் மக்கள் வர்க்கம், திராவிடர்களான அறிவு தமிழர்கள் மத்தியில் சிறந்து வளர்ந்தது. தமிழர்கள் பௌத்த, சமண கொள்கைகளை கடைபிடித்து ஒரு அறிவு சமுதாயமாக வளர தொடங்கினர்.
இந்து மத கொடூர விதிமுறைகளையும், மூட செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் இனவெறி பிடித்த பார்ப்பனர்கள், இந்து மன்னர்கள் துணைகொண்டு பல லட்ச பவுத்த, சமண தமிழர்களை உயிருடன் கழுவேற்றி கொன்றனர்.
கழுவேற்றம் என்பது சிலுவையை விட கொடூரமான மரணதண்டனை முறையாகும்.


கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.
கழுவேற்றும் அளவுக்கு பௌத்த சமண தமிழர்கள் செய்தது என்ன..?
இரண்டு நன்னெறி மார்க்கமும் இறைமறுப்பை கொள்கைகளாக கடைபிடித்து மனிதர்களை மனிதர்களாக வாழ வழிசெய்தது.
மனித பலி, விலங்கு பலி, சாதி வர்ண கோட்ப்பாட்டை தீவிரமாக எதிர்த்தது.
தற்போது தமிழ், தமிழன் என்று கத்தி திருவோர் தமிழ் வரலாறு, இலக்கிய இலக்கண வரலாறு தெரியாத முட்டாள்கள். தமிழ் இன மொழிக்கு உலகமத்தியில் மதிப்பு எப்படி வந்தது என்று தெரியாத மடையர்கள். இந்து மதத்தில் இருந்து கொண்டு தமிழ் நான் தமிழன் என்று கத்தினால் அவர்களை விட தமிழுக்கும் தமிழினத்துக்கும் துரோகி வேறு எவனும் இருக்கமுடியாது என்று நான் துணிந்து கூறுவேன்.
அந்த அறிவு தமிழர்காளன ஆதி திராவிட பௌத்த, சமண தமிழர்களே உலக பொதுமுறையாம் திருக்குறளை தந்தார்கள்.
தமிழ்மொழியில் பேரிலக்கியங்களையும் காப்பியங்களையும் இலக்கண நூல்களையும் இயற்றினார்கள்.
ஐம் பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி இவை மூன்றும் சமண சமய சார்புடையவை.
மணிமேகலையும்,குணடல கேசியும் பௌத்த சமய நூல்கள்.
ஐஞ்சிறுங் காப்பியங்களும் சமண சமய காப்பியங்கள்.
எட்டுத் தொகை நூல்களான நற்றினை, குறுந்தொகை, ஐங்குறு நூறு,பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,புற நானூறு ஆகிய எட்டும் சமண நூல்கள். பத்துப்பாட்டுகளில் திருமுருகாற்றுப் படை தவிர மீதி ஒன்பது பாடல்களும் பௌத்த, சமண சாமய நூல்கள் ஆகும்.
பதிணென் கீழ்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை என்று 11 நூல்கள் அனைத்தும் சமணம்.
அதேபோல் பதிணென் மேற்கணக்கு நூல்கள் அனைத்தும் சமணம் தமிழ் இலக்கண நூல்களில் பழமையான தொல்காப்பியம் சமண நூல்.
இலக்கியங்களை தொகுக்க, நீக்க, பகுப்பாய்வு செய்ய பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் சமண சமய நூல்.
நீதிநூல்களில் பெரும்பகுதி ஏலாதி, சிறுபஞ்சமூலம், நாலடியார் பழமொழி நானூறு ஆகியவை சமண நூல்களாகும். சமண சமயத்தவர் தமிழுக்கு செய்துள்ள தொண்டுபோல வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை.
தற்குரி தமிழர்களே இந்த இலக்கண, இலக்கண படைப்புகள் இல்லையென்றால் தமிழுக்கு ஏது மதிப்பு..?
இந்து மதம் போன்ற ஒரு கொடூர தன்மையுள்ள மதத்தை வரலாற்றில் எங்கும் காணமுடியாது.
இந்து மதம் வர்ணாசிரம முறையில் வாழவேண்டும் என்கிறது - பௌத்த, சமணம் மனிதன் எந்தவொரு பாகுபாடின்றி அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும் என்றது.
இந்துமதம் கல்வி பிரமினர்களுக்கே. மற்றவர் கேட்டால் காதில் இயத்தை காச்சி ஊற்றியது - அறிவு மார்க்கம் பௌத்த, சமண பள்ளிகள் அமைத்து அதில் அனைவருக்கும் கல்வி கொடுத்தது. இல்லையென்றால் இவ்வளவு சிறந்த இலக்கண, இலக்கணங்கள் படைக்கமுடியுமா? நாலந்தாவும், காஞ்சி பல்கலைக்கழகம் பற்றி வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
மக்கள் அறிவுள்ள மக்களாக வாழவேண்டும் என்று போதித்த காரணத்தினாலும், தமிழ் மக்கள் பௌத்த சமண மார்க்கத்தை அதிகம் ஏற்றதாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சைவ இந்து மதத்தால் பல லட்ச பௌத்த, சமண அறிவு தமிழர்களை கழுவேற்றும் நிகழ்வு மட்டுமின்றி கொலை செய்தல், கலகம் விளைவித்தல், உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏற்றி மிதித்துக் கொல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்து மதத்தை தழுவாத காரணத்தினால் இந்த கழுவேற்ற தண்டனை, இதர கொடுமைகள் அரங்கேற்றியது. இதற்கு அஞ்சி பல தமிழர்கள் இந்து மதம் மாறினார்கள்.
இந்த கழுவேற்ற தண்டனைகள் தமிழ் நாட்டு அனைத்து பகுதிகளிலும் பார்ப்பான வெறி கொண்ட சைவ இந்து மதத்தால் அறிவு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்மந்தர் மதுரையில் எண்ணாயிரம் (8000) சமணர்களைக் கழுவேற்றிய செய்தியை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகளை ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.
இப்போதும் கூட மதுரையில் நடைபெறும் திருவிழாவில் ஐந்து நாட்கள் கழுவேற்றும் உற்சவம் நடப்பதைக் காணலாம்.
காஞ்சிபுரத்து அருகில் உள்ள திருவோத்தூரில் சைவ - சமண கலகம் நடைபெற்றது. அங்குள்ள சிவன் கோயிலில் சமணர் கழுவேற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது
'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.
இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் இந்து மதம் பௌத்தம் மீது எந்தளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.
பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 1925, page 18
அரசர் குலச்சிறையாரை நோக்கி, சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று கட்டளைக்கு சைவ பார்ப்பன அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் கழுவேற்றினர். - ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, Page 18
மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை, 1983, Page 28
கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.
விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற்புராணம்,சென்னை,
1925, Page 494.
கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'
'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர். --பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை, 1937, Page 1195.
திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகங்கை, திருச்செந்தூர், காஞ்சிபுரம், கழுகுமலை போன்ற பகுதிகளில் பல்லாயிரம் கழுதூண்கள் நட்டு வைத்து கழுவேற்றுயதுடன் பௌத்த விகாரைகளும், சமண பள்ளிகளும் சைவ இந்து கோவில்களாக மாற்றப்பட்டன.
இந்த வரலாறு தெரிந்தும் ஒருவன் இந்து மதத்தில் இருந்து கொண்டு, தமிழ், நான் தமிழன் என்று கத்தினால் அவனைவிட தமிழுக்கும் தமிழினத்துக்கும் துரோகி வேறு யாவரும் இருக்கமுடியாது.
நன்றி தோழர் - டக்ளஸ் முத்துக்குமார்.

No comments: