Thursday, July 12, 2018

மனிதர்கள் வளர்ச்சியடைந்தது அறிவால், சிந்தனையால். வீரத்தால் அல்ல

கற்காலத்தில் நமது முன்னோர்களுக்கு விவசாயம் எல்லாம் செய்யத்தெரியாது, கல்லால் ஆன ஆயுதங்களை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி பசியை போக்கினர் என்று படித்திருப்போம்.
ஆனால் அதற்கும் முன்பு மனிதன் கற்களை பயன்படுத்தியது வேட்டையாட அல்ல. சிங்கம், புலி போன்ற விலங்குகள் வேட்டையாடி,பிறகு அதன் மீதத்தை கழுதைப்புலிகள், நரி போன்றவையும் உண்ட பிறகு மீதமிருக்கும் எலும்புகளை கற்களால் உடைத்து அதிலுள்ள மஜ்ஜைகளை உண்பதுதான் கற்கால மனிதர்களின் வழக்கம்.
உணவுச் சங்கிலியில் பல படிகள் கீழே இருந்த மனிதன் பிறகு தனது அறிவால் எட்ட முடியாத உயரத்திற்கு மேலே வந்தான்.
மனிதர்கள் வளர்ச்சியடைந்தது அறிவால், சிந்தனையால். வீரத்தால் அல்ல.
ஆயுதங்கள் இல்லாத ஒத்தைக்கு ஒத்தையில இன்றும் ஒரு மனிதனால் சிங்கத்தை வெல்ல முடியாது.

No comments: