Thursday, July 12, 2018

கீதையே புனைவானதுதான்.

கீதையே புனைவானதுதான்.
இந்தத் திரௌபதி பாண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ளத் துடித்ததை, கண்ணன் பாண்டவரிடம் கூறியதாகப் பாண்டவர் வரலாறு கூறுகிறது. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை, முன் நிறுத்தி (இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்.
பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.
''தானம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்
கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"35
- இதன் அர்த்தம் ''என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்"35 என்று இழிந்த சாதிகளை வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்தத் திமிர்ப் பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக பார்ப்பனியத் திமிர்கள்தான்.
கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், ''பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"23 என்று சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது.
ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார். இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன். பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த வக்கிரக் கடவுள் கிருஷ்ணன். இந்தப் பாலியல் கூத்துகளை ~இராசலீலை| என இந்துமதம் போற்றுகின்றது. இந்தக் காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.
தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10, அத்22 இல்) ''கோபிகளைத் தழுவிக் கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ணப் பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"27 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.
இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டியும் கிருஷ்ண லீலையாகும். இந்தக் கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியைக் கண்டு காமம் கொண்டு, தனது மனைவி இராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.
உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், அடிமைகளாகப் பெண் தெய்வங்களை மாற்றி கிருஷ்ணனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், சமுதாயத்தில் பெண்தெய்வ வழிபாடுகளை உருவாக்க முடிந்தது.
விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மன் தன்மகள் ருக்மணியை (இவள் ~பட்டமகிஷி| என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லின் அர்த்தம் எருமை மாடாகும்.) சிசுபாலன் மன்னனுக்குத் திருமணம் முடிக்க இருந்த நேரம், கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவைச் சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே.
இந்தக் கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்ச்சுனன் சுபத்திரையைப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான். இந்தக் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனமாடுவது, பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியைத் திருடி இரசிப்பது என்று பல அற்புதங்களைச் செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கத்தைச் சாதகமாகக் கொண்டு, பெண்களின் உடுப்புகளைத் திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்திக் கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக இரசித்தவன்.
இதை இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.
''புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்கமான உறவைத் தந்துவிட முடியுமா? எனவே, அடுத்த பிறவியில் அவர்கள் அனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."23 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்புக் காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல.
பெண்களின் உறுப்புகளை வக்கரித்து அதை இரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்குகின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி, ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களைக் கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டை விடுவதுமென வக்கிரத்தைப் போற்றுவதே இந்து மதம் தான்.
இந்தப் பாலியல் வக்கிரத்தில் எப்படிக் கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். ''... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவி செய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திபடுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 9,00,000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திபடுத்திட அவனும் 9,00,000 ஆடவராக மாறினான்...
ஒரே நேரத்தில் 18,00,000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறி பதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."23 வக்கிரத்தின் எல்லை மீறிய விவரிப்புதான் இது.
கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோஷத்துக்குக் குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதைப் பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனிதச் சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவான். பெண்களின் உடல்களைப் பிராண்டிக் கடித்து நடத்தும் இன்றைய வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களைப் பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின் நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.
''மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி"35
இதன் அர்த்தம் ''அர்ச்சுனா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"35
- என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல.
''தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"
- என்று கூறி நியாயப்படுத்தும்போது, பெண்கள் மீதான சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது, குரங்குகளாகக் குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.
இந்தக் கிருஷ்ணன் விரகதாபத்தைக் கோபிகளுக்கு ஏற்படுத்தி விட்டுத் திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தைத் தீர்க்க மரங்களைக் கட்டிப் பிடித்தனராம்;. மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதத்தின் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியைச் சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள்தான்.


No comments: