Wednesday, July 11, 2018

தஞ்சை கலைஞரின் மண்...

தஞ்சாவூர் ..
தஞ்சை திமுக.. பிற மாவட்டங்களை விட இங்கே திராவிடத்தின் வேர் ஆழ ஊடுறுவியிருக்கும்..காரணம் அதிகம்  அடிமைபட்டுகிடந்த  மக்களை விழுப்புணர்வை ஊட்டி சுயமரியாதைக்காரர்களாக்கியது திராவிடம்
தஞ்சை என்றாலே நிலகிழார்கள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள் .. ஆயிரம் ஏக்கர் நஞ்சை ஆயிரத்துஐநூறு ஏக்கர் புஞ்சை என ஒரு சில குடும்பங்களே ஆட்சி செலுத்தியது.. கபிஸ்தலம் மூப்பனார்  உக்கடை தேவர்..  பூண்டி  வாண்டையார் என கொடிகட்டி ஆட்சிசெய்தார்கள்.. அவர்கள் வைத்தது தான் எழுதபடாத சட்டம் ..  அவர்களை மீறி எதுவுமே நடக்காது .. யாரும் எதிர்க்க முடியாது  அவர்களது அரசியல் காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே..
அதோடு சிறு சிறு நிலக்கிழார்கள்.. அதாவது ஐம்பது அறுபது ஏக்கர் வைத்திருப்போர்.. சிலரிடம் நூற்றுக்கணக்கில் இருக்கும் ..சில இஸ்லாமிய குடும்பங்களும் நிலகிழார்களாக இருந்தன .. பார்பனர்கள் காவிரிக்கரைகளில் இனாமா பெற்ற நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களோடு ஏறக்குறைய ஆட்சி செய்தார்கள்
அவர்களும் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார்கள்.. சிறு சிறு முதலாளிகள் கூட விவசாயத்தை பிரதானமாக கொண்டவர்கள் கூட பெரும் "ஆண்டைகளின்"அருகில் தான் இருந்தார்கள்..  இவர்களையெல்லாம் மீறி சரியாக சொல்லவேண்டுமெனில் எதிர்த்து  கட்சியை வளர்த்தெடுத்தில் பெரும் பங்கு கலைஞருக்கு மட்டுமே உண்டு ..
..
ஏதாவது பேராட்டம் பொது கூட்டமென்றால் காங்கிரஸ்காரர்களை மீறி தஞ்சை மாவட்டத்தில் எதுவுமே செய்ய முடியாது மீறினால் அவர்கள் நிலங்களில் வேலையில்லை குத்தகை இல்லை.. குடும்பம் அந்த ஊரில் குடியிருக்கவே முடியாது.. எந்தவொரு போராட்டமும் ஆரம்பத்திலேயே ஒடுக்கபடும் ..
ஒருங்கிணைந்த தஞ்சையின் பழைய  மாவட்டத்தின் செயலாளராக இருந்த நீலமேகம் எங்கண்ணே நம்ப கூப்பிட்டா வரவா போறானுக என்ற பேச்சை கேட்காமல் கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து .. திராவிட கொள்கைகளை ..யாருக்காக திமுக  துவங்கபட்டதென்பதை.. யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை என  சுயமரியாதை தட்டியெழுப்பி .. மரியாதையோடு நடத்தாதவர்களோடு நமக்கென்ன வேலை என கூறி.. மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் கலைஞர் .. பிற மாவட்டங்களை விட தஞ்சை மீது கலைஞருக்கு தனி கவனமிருக்கும்.. சொந்த மாவட்டமென்பதால் மட்டுமல்ல சொந்த மண்ணில் எப்படி புறக்கணிக்கபடுகிறோம்.. ஒரு சில  குடும்பங்களும் ..சில பார்பனர்களும் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிலையை நேரில் கண்டு படித்தவர்..  மண்ணின் நிறம் அறிந்தவர்
மக்களின் மனதறிந்தவர்..
தஞ்சை திமுக என்றாலே மன்னையும் மணியும் நினைவுக்கு வந்தாலும் அடித்தளமிட்டது கலைஞர்தான்..
..
அண்ணன் கோ.சி.மணியை பற்றி சொல்லவேண்டும் இன்றைக்கு மூன்று மாவட்டங்களாக இருக்கும் ஒருங்கிணைந்த தஞ்சையில் ஒற்றை ஆளாய் சுற்றி திரிந்து கட்சியை வளர்த்தவர் கலைஞருக்கு பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் கட்சிகாரனை பெயர் சொல்லி அழைத்து அவனோடு நெருக்கம் காட்டியவர்.. அண்ணனோடு பழகி அந்த நாட்கள் இன்னமும் பசுமையாய்..
..
கலைஞர் கட்டியெழுப்பிய கோட்டை தஞ்சை
ஒடுக்கபட்ட சமூக பின்னணியில் இருந்த உயரத்தை எட்டியவர் .. அதனால் தான் எந்த கோவிலில் ஓரமாய் நின்று கதைக்க இசைக்க வேண்டுமென்றார்களோ  அதே கோவிலில் பட்டு சட்டையோடு  நாற்காலியில் அமர்ந்து பார்ப்பன கூத்தாடியின் நடனத்தை ரசித்ததெல்லாம் நமக்கு நிறைய உணர்த்தும்.. சுயமரியாதை விட்டுகொடுக்காத.. யாரால் எதற்காக புறக்கணிக்கபட்டோமே அவர்களை கொண்டே சிறப்பு பெறுவது.. அவர்களின் வினைக்கு எதிர்வினையாற்றுவது.. பல்லக்கில் நீ மட்டும்தான் செல்வாயா ..நாங்களும் செல்வோம் சாரட்டில்
என்று சொல்லாமல் வினையாற்றும்..
காவிரிக்கரை பிராமணர்கள்  ஜமீன்கள்  நிலக்கிழார்கள்  மிராசுகள்  தங்களை குறுநில மன்னர்களைப்போல நினைத்தார்கள் இது பிற மாவட்டங்களில் அதிகமில்லை..
இவர்களை எதிர்த்து  பேசவோ.. அவர்கள் முன் அமரவோ.. ஏன் உரக்க பேச கூட முடியாத சூழலை மாற்றியது திராவிட இயக்கம் அதில் பெரும்பங்கு கலைஞருக்குண்டு.. கலைஞர்  தன் எழுத்து நாடகம் பேச்சு என மக்களை தினம் தினம் சந்தித்து இன உணர்வை சுயமரியாதையை ஊட்டினார்..
தஞ்சை சுயமரியாதை மண்ணாக மாற்றியதில்
திராவிட உணர்வாளர்களை அதிகம் உருவாக்கியதும் கலைஞரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி..

கோடைகாலங்களில் வயல்வெளிகளில் கலை நாடகம் இசையென கூத்து நடக்கும்.  அதில் புராணங்களும் மத பிரசங்கங்களும் நடக்கும்.. அங்கும் பகுத்தறிவு நாடகங்களை .. கொள்கை முழக்கும் தெருமுனை கூத்துகளை.. செய்து தஞ்சையில் திமுகவை வளர்த்தவர் கலைஞர் பெருமகன்..   அதனால் தான் எல்லோரையும் தோற்கடிக்க முடிந்த காமராஜாரால் கலைஞரை தோற்கடிக்க இயலவில்லை
தஞ்சை கலைஞரின் மண்.. எனது மண்ணும் கூட..
..
ஆலஞ்சியார்

No comments: