Thursday, July 12, 2018

மயிர் கடவுள் கிருஷ்ணன் - கடவுள் மயிருங்க

மயிர் கடவுள் கிருஷ்ணன் - கடவுள் மயிருங்க - அர்த்தமுள்ள இந்துமதம்....
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது, இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை, அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று மஹாவிஷ்ணுவைக் கேட்டார்களாம்.
உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம், மற்றது வெண்மை நிறமாம்.
கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம்.
இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் - அபிதானகோசம்தான்.
பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறுபவர்கள் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!
கடவுள் சண்டை போட்டார், கொலை செய்தார் விபச்சாரம் செய்தார், சூழ்ச்சி செய்தார், தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்டதிலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றம் புரியும்.
இதையெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளை ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

No comments: