Thursday, July 12, 2018

சூரிய கிரகணம் சந்திர கிரகணத்தின் போது பாம்பு விழுங்குகிறது

சூரிய கிரகணம் சந்திர கிரகணத்தின் போது பாம்பு விழுங்குகிறது என்ற இன்றைய பரவச நிலைக்கு ஒப்பானதே ஆதிகால மனிதர்களுக்கு அதிகாலையில் சூரியன் எழுவதைப் பார்த்த போது அதிசயமாய் இருந்திருக்கும்.
அவர்கள் மட்டும் தான் ஆதி மனிதர்களா என்ன?
பாம்பு கதை சொல்லும் பரதேசிகளும் அதையொட்டிய நிலையிலேயே உள்ளவர்கள் தான்.
பிற தேசம் சார்ந்தவர்களை அழைத்த சொல்லே பரதேசி என்றானது.
கிறித்தவர்கள் வழிபாட்டின் முடிவில் "ஆமென்" என்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் அதே போல் "ஆமீன்" என்கிறார்கள்.
இதன் இன்றைய பொருள் "அப்படியே ஆகட்டும்"என்பதே.
இறைவனின் விருப்பம் என்ற பொருளில் சொல்லப்படுகிறது.
இந்தச் சொல் பிறந்த வரலாறென்ன?
மனித இனம் தோன்றி வளர்ந்த போது இயற்கையை வழிபடும் முறையே இருந்தது,
எகிப்தில் ஆதிகாலச் சூரியக் கடவுளை "ஆமென்" என்றே அழைத்தனர்.
"ஆமெனோடெப" என்பவர் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார்.அவர்தான் ஆமென் என்ற சூரியக் கடவுள் என்றார்.
சிலுவையின் தோற்றமும் நான்குபுறமும் சிதறும் சூரியக்கதிர்களின் வடிவமே.
கிறிஸ்தவர்கள் அல்லாத சூரியனை மட்டும் வழிபடும் அஸ்ஸாம் இனக்குழு ஒன்று இன்றும் சிலுவையை வழிபடுகிறது.
உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் சூரியனோடு தொடர்பு உண்டு.
சூரியன் இல்லையேல் மனித குலம் ஏது.
சூரிய நமஸ்காரம் செய்யாதவர்கள்
இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்துத்வவாதிகள் அலறுவார்கள்.
ஆமெனும் ஆமீனும் சூரிய நமஸ்காரமும் ஒன்று தான்
அதனால் இந்தியாவை விட்டு
வெளியேறும் தேவை இல்லை.

No comments: