ஆசிரியர் மீது இவங்களுக்கு என்ன காண்டுனே தெரியலை.. ஆனா, ஊனா பெரியாரின் கொள்கைகளைப் பரப்பாமல் பணமாக்கி விட்டார்னு மொன்னையா ஒரு விமர்சனம் வைப்பாங்க..
அவர் மட்டும் இல்லைனா பெரியார் திடலுக்கு பூட்டு போட்டிருக்க வேண்டியிருந்திருக்கும் என்பதே உண்மை.. தந்தை பெரியாரின் இறுதிக் காலத்திலேயே வருமான வரித் துறையைக் கொண்டு கழகத்தை முடக்க எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டது மத்திய அரசு. அய்யாவிற்குப் பின் மணியமையார் காலத்தில் அவரை மிசாவில் சிறையில் தள்ளி 60 லட்சம் வரி கட்ட வேண்டும் என்றது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.. இதற்காக கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள், மேல் முறையீடுகள் என அனைத்திலும் கழகத்திற்கு எதிராகவே தீர்ப்பு வந்தது..
ஆசிரியர் தலைமைப் பொறுப்பு வந்த பின்னே இதை டிரிபியூனலுக்கு கொண்டு சென்று, வழக்கை வென்று, வருமான வரித் துறை அதுவரை வசூலித்த தொகையை வட்டியோடு திரும்பப் பெற்றது வரலாறு..
அதனால, ஆசிரியரை குதிரை வண்டில மட்டுமில்ல.. பெரிய தேர் கூட வைச்சு கூட்டிட்டு வருவோம்.. வயிறு எரிஞ்சா பஞ்ச காவியா குடித்துத் தணிக்கவும் !
No comments:
Post a Comment