1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்கு எதிர்ப்பாக இருந்த பார்ப்பனரல்லாத
உயர்ஜாதி கும்பல், சென்னை கன்னிமரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கருக்கு
விருந்து கொடுத்து, அவரிடம் ‘நாங்கள்தான் உண்மையான பார்ப்பனரல்லாத
இயக்கம்’ (நீதிக்கட்சி) என்று நற்பெயர் வாங்குவதற்காக
திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த திட்டம் அண்ணல் அம்பேத்கருக்கும்
தெரிந்திருக்கிறது. தன்னைப் பாராட்டி விருந்து கொடுத்தவர்கள் மத்தியில்
அண்ணல் இப்படி பேசியிருக்கிறார்:
“பார்ப்பனரல்லாத தோழர்களே, உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே அதில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங்கள் என்ன? உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன?
எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கும் மாறான கட்சி என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பனப் புரோகிதம், நடவடிக்கையில் பார்ப்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும் இரண்டாவது வகுப்புப் பார்ப்பனர் மாதிரி ஆக்கிக் கொண்டு, முதலாவது வகுப்புப் பார்ப்பானாக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொண்டு வருவீர்களானல் நீங்கள் எந்தத் தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ள அருகர்கள் ஆவீர்கள்?
பார்ப்பனர்லலாதார் கட்சிக்கு முதாலவதும் கடைசியானதுமான கொள்கை ‘உத்தியோம்’ தானா? அல்லது உத்தியோகத்தில் சரிபங்கு மாத்திரம்தானா? இதைத் தவிர வேறு என்ன கொள்கையை இதுவரை பின்பற்றிவந்தீர்கள்?”
“உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டிப் பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள். அதனாலேயே உங்களுக்குச் செல்வாக்கில்லை. இப்படியே இருந்தால் இனியும் நீங்கள் என்றென்றும் உருப்படமாட்டிர்கள்”
என்று பேசியிருக்கிறார்.
(குடியரசு 30.9.1944)

No comments:
Post a Comment