Saturday, March 09, 2019

அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பனியத்தையும் இந்து மதத்திற்குள் இருக்கும் சாதிய கட்டுமானங்களையும் எதிர்த்து எழுதி, போராடி இறுதியில் பெளத்தத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு அதை ஒரு Solution ஆக சாதிய சகதிக்குள் சிக்கியவர்களுக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
அப்படிப்பட்ட அம்பேத்கரையே இந்த இந்துத்துவம், அவருடைய ஆள் போல காட்டுகிறது. உலகில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் பல கோணங்கள் வைத்து ஒரு Intellectual ஆக இருப்பவரால் எப்படி வேண்டுமானாலும் மடைமாற்றி எழுதி வரலாற்று புனைவு செய்ய இயலும். அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
நாளை பெரியாரை கூட இந்து மதத்தவராக ஒரு புத்தகம் எழுதி அவருடைய ஆளாக காட்ட இயலும். அதை படிப்பவர்கள் நம்பும் அளவிற்கு வேறு கோணத்தில் எழுத முடியும். ஆனால் உண்மை கண்ணால் கண்டவர்களுக்கு தெரியும். அப்படி தான் ஒரு முட்டாள் கூட்டம் மொத்த 100 வருட தமிழக வரலாற்றில் 0.01% கூட தெரியாமல் 100 வருடத்தில் செய்த அனைத்து தவறுகளுக்கும் பல உள்நோக்கங்களை கற்பித்து, வரலாற்று புனைவை பேசுகிறார்கள்.
அதையெல்லாம் ஆராய்ந்து பார்க்குமளவிற்கு அக்கூட்டத்தில் உள்ளவர்களுக்கு வரலாற்று அறிவோ பகுத்தறிவோ இல்லை. அப்படி இருப்பவர்களும், இந்த மடைமாற்றத்தை வெற்றியாக்க உதவுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் பெரியாரை 1% கூட படிக்காமல் சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும் தவறுதலாக புனைந்ததை வைத்து திருப்பி திருப்பி உளறி கொண்டிருப்பது.
ஒரு மனிதன் சாதிவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு சாதி தான் பெரிதாக இருக்கும், மற்ற எதுவும் கண்ணுக்கு தெரியாது. அவன் சாதியை விமர்சிப்பவன் எல்லாம் நம்முடைய எதிரி சாதிக்காரன், வேற்றுசாதிவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஒருவன் மதவெறி பிடித்து இருப்பானே ஆனால், அவனுக்கு மதம் தவிர ஒன்றுமே கண்ணுக்கு தெரியாது. அவன் மதத்தை விமர்சித்தால், அவன் மதத்தை அழிக்க வந்த எதிரி, வேற்றுமத வெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
 
ஒருவன் இனவெறி பிடித்து இருந்தால், அவனுக்கு அதை தவிர மற்றவை கண்ணுக்கு தெரியாது. அதை குறித்து கேள்வி எழுப்பினாலே வேற்றுஇனவெறியன் என்று தான் இயல்பாக தோன்றும்.
ஆனால் பெரியார் இம்மூன்றையும் தாண்டியவர் என்பது அவரை படித்தவர்களுக்கு தெரியும். அவர் சாதியை சாக்கடை என்றும், மதத்தை மலம் என்றும் பேசியவர். அவர் இனம் என்று வரும்போது, ஆரிய பார்ப்பனர்களை எதிர்க்க மட்டுமே திராவிட இனம் என்று பேசுவார். ஆனால் அவர் சாதி, மொழி, இனம், மதம் என அனைத்தையும் தாண்டி மனிதம் என்று புனிதத்தை மறுத்து உயிர்நேயம் மற்றும் சுயமரியாதையை பேசியவர்.
ஆகையால் அவரை அரைகுறையாக பார்க்கும் சாதிவெறியர்களுக்கு அவர் ஒரு வேற்று சாதிவெறியன் போலவும், மதவெறியர்களுக்கு இன்னொரு மதவெறியன் போலவும், இனவெறியர்களுக்கு இன்னொரு இனவெறியன் போலவும் தெரிவது இயல்பே. ஏனென்றால் அவர் சாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்ப்பட்டு ஒரு நவீன கற்றறிந்த சமூகத்தை உருவாக்க நினைத்தார். ஆகையால் அந்த முட்டாள்களுக்கு அப்படி தான் தெரியும்.
இன்னும் பல முட்டாள்கள் அவரை புரிந்து கொள்ளாமல், அவர் இந்து மதத்தை அதிகம் விமர்சித்ததால் தான் இஸ்லாமியர்கள் அவர் பின்னால் செல்கிறார்கள் என உளறுகிறார்கள். அவர் பேசிய சுயமரியாதை தான் அவரை இந்து மதத்தை அதிகமாக விமர்சிக்க வைத்தது. அவர் அடிதட்டு உழைக்கும் இந்து மக்களை குறை கூறவில்லை, அவர் பார்ப்பனிய மதத்தை சாடினார்.
இந்து மதத்தின் உட்கூறான வர்ணாசிரமத்தால் சாதிய கட்டமைப்புகளில் சிக்கி தன்மானத்தை இழந்து அடிமைப்படும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க தான் அதிகமாக மனுவையும் இந்து மத வேத புராண இதிகாசங்களில் இருக்கும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் வசனங்களையும் அப்படியே மேடையில் பேசினார். அதையே தான் காப்பியடித்து இந்த முட்டாள் கூட்டத்தின் தலைமை.ஒ-ம் ஒரு காலத்தில் பேசிவந்தார். அவரே தான் இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற குரலை அதிகமாக ஒலிக்க செய்தார்.
அன்றைய காலத்தில் பல இஸ்லாமியர்கள், பெரியாரின் பிரச்சாரத்தை கேட்டு நாத்திகர்களாக பெரியாருக்கு பின்னால் அணி திரண்டார்கள். நிறைய பெரியார் சிலை கல்வெட்டுக்களில் இஸ்லாமிய பெயர்கள் தான் இடம்பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அவருடைய சில சிந்தனைகளை, கொள்கைகளை தவிர்த்து பலவற்றை இஸ்லாமியர்கள் படித்தும் பின்பற்றியும் தன் வாழ்க்கையை தகவமைத்து இருக்கிறார்கள்.
அவர் அனைத்து மதத்தையும், ஏன் இஸ்லாமிய மதத்தையும் உட்பட விமர்சித்துள்ளார், ஆனால் யாரும் அவரை ஹிந்து மதவெறியன் என்று விளித்தது இல்லை. ஆனால் அவர் இந்து மதத்தை எதிர்த்ததை, வைத்து அவரை இஸ்லாமிய கைக்கூலி என்று கூவியவர்கள் தான் அதிகம், அதன் நீட்சி தான் இன்று தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர்கள் வரை நீள்கிறது.
அவர் பேசாத தலைப்புகளே இல்லை, தமிழ் மொழி, பெண்ணியம், பார்ப்பனியம், ஆரியம், திராவிடம், சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, திராவிட நாடு, தமிழ்த் தேசியம் என பலவற்றை பேசியுள்ளார். இதனுடன் சேர்த்தே அவருடைய கொள்கையான நாத்தீகத்தையும் பேசியுள்ளார். ஆனால் என் பின்னால் வருபவர்கள் அனைவரும் நாத்தீகர்களாக தான் இருக்க வேண்டும் என்றோ, அனைத்து திராவிடர்களும் நாத்தீகர்களாக தான் இருக்கவேண்டும் என்றோ கூறவில்லை.
அவருடைய அதிகமான கருத்து பகுத்தறிவாக தான் இருக்கும். நாத்தீகம் என்பது கடவுள் மறுப்பு ஆனால் பகுத்தறிவு என்பது முழுக்க நாத்திகம் இல்லை, அது பகுத்தாய்ந்து ஏற்றும் கொள்ளும் அறிவு. அதனால் தான், அறிஞர் அண்ணா பகுத்தறிவை பரவலாக்கினார். அவர் ஒட்டுமொத்த மக்களின் அடையாளமாக கடவுள் மறுப்பை தூக்கி புடிக்கவில்லை. அதுவும் அவருடைய ஒரு கொள்கை.
ஆனால் தமிழை வைத்து பிழைத்து எய்க்கும் கூட்டம் சொல்கிறது, "முப்பாட்டன் முருகன் என சொல்லும் போது எங்களை எதிர்க்கும் நீங்கள், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஏற்கிறீர்கள் " என்று உளறி கொட்டுகிறது. பெரியார் ஒரு சிந்தனைவாதி, அவர் ஆயிரம் சிந்தனைகளை பேசிவிட்டு சென்றிருக்கிறார், அதில் ஒரு சிந்தனை தான் கடவுள் மறுப்பு. ஒட்டு மொத்த மனிதர்களின் அடையாளமே நாத்திகம் என சொல்லவில்லை, பகுத்தறிவு என்றார்.
வெறி பிடித்தவர்கள் போல ஒரு கடவுளை அனைவருக்கும் முன்னோர் என அவர் சொல்லிவிட்டு சென்றால் எதிர்க்கலாம். கடவுள் இல்லை என்று தான் அவர் பிரச்சாரம் செய்து இருக்கிறார். ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொண்டு கடவுள் இல்லை என சொல்லவில்லை.
ஆனால் இங்குள்ள மூடர் கூட்டம் தான், ஒட்டு மொத்த தமிழ் மொழி பேசுபவர்களின் பிரதிநிதியாக தன்னை கற்பனை செய்து கொண்டு பல நம்பிக்கைகளை பின்பற்ற கூடிய மக்கள் வாழும் நிலப்பகுதியில் "நம்முடைய முப்பாட்டன் என்று ஒருவரை" அறிவிக்கிறீர்கள். இன்னொருவனின் முப்பாட்டனை முடிவு செய்வது அவனே, நான் இல்லை. அது போல இன்னொருவன் ஒருவரை எனக்கு முப்பாட்டன் என்றால் அதை எதிர்க்கும் உரிமையும் எனக்கும் இல்லை. ஆனால் ஒரு மொழி பேசுபவர்களின் மூதாதை என்று ஒருவரை அறிவிக்கவோ, பேசுவதோ தவறு. [இந்த பத்தியை திரும்ப திரும்ப படித்தால் சித்தம் தெளிய சிவம் அருள்புரியும்]
இவர்கள் முப்பாட்டன், முன்னோர் வழிபாடு என்பதை மட்டுமே தமிழ்த் தேசியமாக கற்பனை செய்துகொண்டு கிறுக்குதனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். பிரபாகரன், தமிழரசன் போன்ற போராளிகள் சொல்லாதவை, எல்லாம் இந்த கூமுட்டைகள் சொல்லி அதை தமிழ்த் தேசியம் என சொல்வது நகைப்பாக தான் உள்ளது. தமிழ்த் தேசியம் என்பது சாதி, மத, இனதுவேஷத்தை எதையும் உள்ளடக்காத அற்புதமான இன அரசியல்.
ஈழத்தில் அதற்கான கட்டாயம் வந்தது, அது துளிர்த்தது. அது போல் இந்தியமும் அதற்கான கட்டாயத்தை உருவாக்கும், அப்போது இந்த கும்பல் செய்வதை மட்டும் பாருங்கள். தமிழ்த் தேசியம் என்ற பெயரை கூறி சாதி, மத தேர்தல் அரசியலை செய்யும் அரைகுறை குடங்கள் இவை.
நான் முருகனுக்கோ, முருக வழிபாடுக்கோ, முருக பக்தர்களுக்கோ எதிராக என் எழுத்துக்களை வைக்கவில்லை, மாறாக அதை ராமரை போல் ஒரு அரசியலாக்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வர துடிக்கும் இரத்த காட்டேறிகளை "முருக பக்தர்களுக்கு"அடையாளம் காட்டுகிறேன். முருகன், ஒரு சமயத்தின் கடவுள், அதை யாரும் இங்கு மறுக்கவில்லை. முருக வழிபாடு, ஒரு கூட்டத்தினர் செய்யும் வழிபாடு , அதை யாரும் இங்கு தடுக்கவோ விமர்சிக்கவோ இல்லை.
சில கூமுட்டைகள் தான் இதை மடைமாற்றி இஸ்லாமிய, கிறித்தவர்கள் முருகனை விமர்சிக்கிறார்கள் என இந்துத்துவ பாணி அரசியல் செய்கிறது. அதோடு மட்டுமில்லாமல், இவ்வளவு தெளிவாக எடுத்து கூறும் போதும் "நீங்க இப்படி விமர்சனம் வைக்கும்போது எங்கூர்ல இருக்குற கிறித்தவன், இஸ்லாமியன் மேல வெறுப்பு வருது, நான் இந்துத்துவாவுக்கு சென்றுவிடுவேன் என குரங்கு வித்தைகளை" போல சிறு குழந்தை பயம் காட்டுவது போல உளறுகிறார்கள்.
இவர்கள் தலையில் கொட்டி" டேய் லூசு பயலே நாங்க முருகனையோ, முருக வழிபாட்டையோ விமர்சிக்கல, ஒரு மதத்தோட கடவுளை ஏன்டா ஒட்டுமொத்த மக்களோட அடையாளமா மாத்தி மத அரசியல் பன்ற நாயே. முருக பக்தர்கள் பாவம். அவர்களை, இந்துத்துவம் போல, ராம பக்தர்களை பயன்படுத்தி நாட்டுல கலவரம் பன்னி ராம பக்தர்களை சிறை கம்பிக்குள் இருக்க வைத்து, மதநல்லிணக்கம் சீர்கெட்டதோ, அப்படியெல்லாம் இங்க நடக்ககூடாதுடா நாயேனு" சொல்றேன்னு சொன்னாலும் இவனுங்க மண்டையில ஏறப்போறது இல்ல.
ஆனால், என் மச்சான் முருகபக்தன் Prabakaran Sathasivamமாதிரி பல லட்சம் மக்கள் இருக்குற வரை இது போன்ற பாசிச கும்பல்களின் குரல் நோட்டா வரைக்கும் தான் கேட்கும்.
கிணற்றுதவளைகளின் குரல் கிணற்றை தாண்டாது ஒறவுகளே.
-விக்டர் இறைதாசன்

No comments: