Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (53)

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து விலகியது ஏன்?

1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரித்தீர்மானம் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து மாநாட்டிலிருந்து பெரியார் வெளியேறினார் என்பதை நாம் அறிவோம்.

வகுப்புவாரித் தீர்மானத்தைக் காஞ்சிபுரம் மாநாட்டில் தந்தை பெரியார் கொண்டுவருவது முதன்முறையல்ல.
1920-இல் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்தபோது, பொதுநலனுக்குக் கேடு விளைவிக்கும் தீர்மானம் என்று சொல்லி மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய எஸ்.சீனிவாச அய்யங்கார் தீர்மானத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார்.

1921-இல் தஞ்சாவூர் காங்கிரஸ் மாநாடு- மாநாட்டுக்குத் தலைமை இராஜாஜி – தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

1923 – சேலம் – மீண்டும் நிராகரிப்பு.

1924 – திருவண்ணாமலை மாநாடு.

இம்முறை மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் பெரியார். ஆனால், எஸ்.சீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாருக்கு எதிராகப் பெரிய அளவில் உறுப்பினர்களைத் திரட்டியிருந்ததால், வகுப்புவாரித் தீர்மானம் நிறைவேறவில்லை.

1925-லும் திரு.வி.க. தீர்மானத்தை ‘ஒழுங்கற்ற தீர்மானம்’ என்று அனுமதி மறுக்க, ‘காங்கிரசால் பார்ப்பனர் அல்லாதார் நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை’ என்று சொல்லி மாநாட்டிலிருந்து வெளியேறினார் தந்தை பெரியார்.

No comments: