Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (41)

சுயமரியாதை இயக்கம் பெண் போராளிகளுக்கான சிறப்பான இடத்தை வழங்கியது. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டுடனும் பெண்களுக்கான மாநாடும் நடத்தப்பட்டது. மாநாடுகளைத் தொடக்கி வைப்பது,  தொடக்கவுரை ஆற்றுவது போன்ற பொறுப்புகளால் பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்.

சான்றாக,1931-ஆம் ஆண்டு விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை இந்திராணி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

1932-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட சுயமரியாதை மாநாட்டை குஞ்சிதம் அம்மையார் தொடங்கி வைத்தார்.

1933-ஆம் ஆண்டு, மூன்றாவது தஞ்சாவூர் மாவட்ட சுயமரியாதை மாநாட்டை நீலாவதி தொடங்கி வைத்தார்.

1934-ஆம் ஆண்டு, திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிட மாநாட்டை அன்னபூரணி தொடங்கி வைத்தார்.

1937-இல் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட மாநாட்டிற்கு மீனாம்பாள் சிவராஜ் தலைமை வகித்தார்.

1938-இல் மதுரை சுயமரியாதை மாநாட்டை ராஜம்மாள் தொடங்கி வைத்தார்.

No comments: