Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (54)

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில், காங்கிரசைச் சேர்ந்த வ.வே.சுப்பிரமணிய ஐயர் தமிழ்க் குருகுலம் ஒன்றை காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் அளித்த நிதியில் நடத்திவந்தார். அங்கு பார்ப்பன மாணவர்களுக்கும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனி இடங்களில் உணவு அளிக்கப்பட்டது.

இச்செய்தியை அறிந்து வெகுண்ட  தந்தை பெரியார், குருகுலத்திற்கு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து வழங்கப்படும் நிதியை நிறுத்திவிட்டார். எனினும் இன்னொருவர் மூலம் அந்த நிதியை வ.வே.சு. வாங்கிச் சென்றுவிட்டார்.

குருகுலத்தில் வர்ணாசிரம முறை கடைபிடிக்கப்படுவதை எதிர்த்து பெரியார் கண்டனக் கூட்டங்களை நடத்தினார். ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து எழுதினார்.

காந்தியோ, ‘ஒரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து சமபந்தி சாப்பாடு அருந்த விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட வேண்டும்’ என்றார்.😳

போராட்டம் வலுவடைந்தது. குருகுலத்திற்கு நிதியுதவி அளித்தவர்கள் பின்வாங்கினர். குருகுலத்தின் நிர்வாகத்தில் இருந்து வ.வே.சு. பின்வாங்கி விலகினார்.

இந்நிகழ்வு குறித்த ஆவணங்களுடன் கூடிய வரலாறு பழ.அதியமானின் ‘சேரன்மாதேவி – குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ என்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

படங்கள் : காந்தியின் கடிதம் 10.03.1925., தமிழ் நாடு ஏட்டில் வந்த கருத்துப் படம், 11.03.1925

(pictures missing)

No comments: