திராவிடம் என்ற சொல்லை உருவாக்கியவர்கள் பெரியாரோ, சுயமரியாதை இயக்கத்தினரோ, திராவிடர் கழகத்தினரோ, திமுகவினரோ, ஏன் நீதிக்கட்சியினரோ கூட அல்ல. இது குறித்து அறிஞர் இராம.சுந்தரம் கூறுவதாவது:
கால்டுவெல்லுக்கு முன் ’திராவிட’ என்கிற சொல் தென்னிந்தியர்களை / தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குமரிலபட்டர் (கி.பி.7ஆம் நூற்றாண்டு) ‘திராவிட பாஷைகள்’ பற்றிக் குறிப்பிடுகிறார். மனு ஸ்மிருதியில் திராவிட இனம் பற்றிய குறிப்புண்டு. கிரியர்சன் தனக்கு தெரிந்த மட்டில் ஹாட்சன் என்பவர்தான் ‘Dravidian’ என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். 1816-ல் வெளியான A.D.Campwell –இன் தெலுங்கு மொழி இலக்கண முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ முதலிய மொழிகளைத் ‘தென்னிந்திய மொழிகள்’ என்று குறிக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக நூல் எழுதிய ஆசிரியர்களும் திராவிட என்ற சொல்லை இனம்/மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது.
எனவே ‘Caldwell coined the term’ என்று சொல்லுவதை விட, அவரே கூறுவது போல, ”The word I have chosen is ‘Dravidian“ from ‘Dravida, the adjectival form of Dravida” என்பது பொருந்தும். எனினும், இந்தச்சொல்லை – ‘திராவிட’ என்ற சொல்லை –வரையறுத்த பொருளில், பயன்படுத்தி உலகெங்கும் பரவச்செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

No comments:
Post a Comment