மதுரையில் ரயில் வண்டி புறப்படுகிறது; காலியாக இருக்கும் அன்ரிசர்வ்
கம்ப்பார்ட்மெண்ட்டில் ஒருவர் காலை நீட்டிக் கொண்டு படுக்கிறார். அடுத்ததாக
கொடை ரோடு வருகிறது; ரிசர்வ் டிக்கெட் வைத்திருப்பவர்கள் எல்லாம்
ஏறுகிறார்கள்; இன்னும் சிலர் அன்ரிசர்வ் கம்ப்பார்ட்மெண்ட்டில்
ஏறுகிறார்கள்; ஏற்கெனவே காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவரை, அய்யா,
காலை மடக்கிக் கொள்ளுங்கள்; நான் உட்கார வேண்டும்'' என்று சொன்னால்,
காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்கிறார்; ஒரு அரை மணிநேரம் வசதியாக காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர், யோவ், வேற கம்ப்பார்ட் மெண்டிற்குச் செல்லலாமே; என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்'' என்பார்.

ஏனென்றால், அரை மணிநேரம் படுத்து அனுபவித்த சுகத்தினை இழப்பதற்கு அவருக்கு
மனதில்லை. எதையோ இழந்ததைப் போன்றுதான் அவர் காலை மடக்கிக் கொள்வார்.
அடுத்தவர்களுடைய உரிமையை மதிக்கவேண்டும் என்பதற் காக அவர் காலை மடக்கி
உட்கார மாட்டார்.
அதுபோன்றுதான், இன்றைக்கு முற்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய முன்னேறிய ஜாதிக்காரர்கள், காலங்காலமாக அனுபவித்தவர்கள். அவர்களை நாங்கள் ஒன்றும் சொல்ல வில்லை. அய்யா நாங்களும் பயணச்சீட்டு வாங்கியிருக்கிறோம்; எங்களுக்கும் உரிமை இருக்கிறது; கொஞ்சம் எழுந்திருங்கள் என்றவுடன், படுத்திருந்தவர், எதையோ இழந்தது போன்று கூக்குரல் எழுப்புகிறார்.
இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் வசதியை அனுபவித்தவருக்கே அவ்வளவு இழப்பு உணர்ச்சி இருந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அனுபவித்தவர்களே கொஞ்சம் உங்களுடைய உரிமைகளைவிட்டு, எங்களுடைய உரிமைகளை நீங்கள் அங்கீ கரியுங்கள் என்று சொன்னால், சுலபமாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
எனவே, இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உரிமைக்குக் குரல் கொடுக்கத் தயங்கக்கூடாது. அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்
இந்திய யூனியன் வங்கியின் வெள்ளி விழாவில் தமிழர் தலைவரின் கருத்துரையின் ஒரு பகுதி.
நன்றி. விடுதலை 26.2. 2019

No comments:
Post a Comment